குடியிருந்த வீட்டை நல்ல பாம்புக்கு கொடுத்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறிய குடும்பம்! தஞ்சை விசித்திரம்!

குடியிருந்த வீட்டில் பாம்பிருந்ததால் கடந்த 17 ஆண்டுகளாக குடும்பம் ஒன்று வீட்டைவிட்டு வெளியே வசித்து வந்த செய்தியானது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


தஞ்சாவூர் மாவட்டத்தில் பசுபதிகோவில் எனும் இடம் அமைந்துள்ளது. பகுதிக்குட்பட்ட மணல் மேட்டுத்தெருவில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுப்புடவை வியாபாரம் செய்து வருகிறது. இவருடைய மனைவியின் பெயர் வசந்தி. வசந்திக்கும் அவருடைய சகோதரரான வெங்கடராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கடந்த 17 வருடங்களாக பாம்பு புற்று இருந்து வந்துள்ளது. அந்த புற்றுக்குள் நல்லபாம்பு இருந்து வந்ததால், அவர்கள் அந்த வீட்டில் வசிக்காமல், மற்றொரு வீட்டில் வாழ்ந்து வந்தனர். பாம்பிற்காக தங்களுடைய பூர்வீக வீட்டையே கொடுத்ததற்காக அப்பகுதி மக்கள் அவர்களை பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக வசந்தியிடம் கேட்டபோது, "எங்களுடைய சிறுவயதில் எங்கள் வீட்டில் ஒரு நல்ல பாம்பு வந்துள்ளது. வசிக்கும் வீட்டில் நல்ல பாம்பு வந்ததற்காக பெற்றோர் அதனை அடித்து கொலை செய்தனர். அதன்பிறகு அடுத்த வருடமே, எங்கள் வீட்டில் மேலும் ஒரு பாம்பு புற்று வளர்ந்தது.  பாம்பிற்கு இடையூறாக நாம் இருக்க வேண்டியதில்லை என்று கருதிய எங்கள் பெற்றோர், பக்கத்து வீட்டிற்கு இடம்பெயர்ந்தனர்.

நாங்களும் அவர்களுக்குப் பிறகு பாம்பு புற்றுக்கு மஞ்சள் வைத்து வணங்க தொடங்கினோம். பாம்பு புற்றை இடித்து வீட்டை வாடகைக்கு விடுமாறு நிறைய பேர் கூறியுள்ளனர். ஆனால் அதில் எனக்கும், என்னுடைய தம்பிக்கும் எந்த விதமும் சம்மதமில்லை. நாங்களும் எங்கள் பெற்றோர் பின்பற்றிய வழிமுறைகளையே பின்பற்றி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.