நெருங்கிய கண்ணாடி வீரியன் பாம்பு! பதறிய விவசாயி! பாய்ந்து வந்து கடித்துக் குதறிய வளர்ப்பு நாய்கள்! கோவை நெகிழ்ச்சி!

தனது எஜமானை கடிக்க வந்த பாம்பை வளர்ப்பு நாய்கள் கடித்து குதறிய சம்பவமானது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒத்தக்கால்மண்டபம் என்னும் இடத்திற்கு அருகே பூங்கா நகர் என்னும் இடம் அமைந்துள்ளது. இங்கு ராமலிங்கம் என்ற விவசாயி வசித்து வருகிறார். வீட்டிற்கு அருகே இவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. பாதுகாப்பிற்காக தோட்டத்தில் 3 நாய்களை வளர்த்து வந்தார்.

இதனிடையே, தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக ராமலிங்கம் தன்னுடைய நண்பருடன் சென்றுள்ளார். 3 நாய்களும் ராமலிங்கத்துடன் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென்று 6 அடி நீளமுள்ள கொடிய கண்ணாடி விரியன் பாம்பு ராமலிங்கத்தின் நோக்கி சென்று கொண்டிருந்தது. 

அப்போது எஜமானனுக்கு ஆபத்து வருவதை உணர்ந்த 3 நாய்களும் பாம்பை கடித்து குதறி கொண்டிருந்தன. ராமலிங்கத்தின் நண்பர் இந்த காட்சிகளை வீடியோவாக எடுத்தார். இந்த வீடியோவை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.