கழிவறைக்குள் இருந்து நீட்டிய கருப்புத் தலை! நேரில் பார்த்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!

கழிவறைக்கு சென்ற பெண் கருப்பாக ஏதோ ஒன்று இருந்ததை கண்டு பயந்த சம்பவமானது ஆஸ்திரேலியாவில் வைரலாகி வருகிறது.


ஆஸ்திரேலியாவில் கெயர்ன்ஸ் என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு நிக்கோல் எர்ரே என்ற பெண் வசித்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமையன்று தன்னுடைய பணியை முடித்துவிட்டு வீட்டின் கழிப்பறைக்குள் சென்றுள்ளார். அப்போது அவருடைய கழிவறை திறந்திருந்தது. உள்ளே நுழைந்து பார்த்தபோது கருப்பாக ஏதோ ஒன்று நெளிந்து கொண்டிருந்தது போன்று தெரிந்துள்ளது. திடீரென்று பாம்பு ஒன்று கழிவறையிலிருந்து வெளியே வந்ததால் அவர் பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், அப்பகுதியில் உள்ள பாம்பாட்டியான வால்டன் என்பவரை அழைத்து நிகழ்ந்ததை கூறினார். உடனடியாக வால்டன் கழிவறையிலிருந்த பாம்பை பிடித்து சென்றார்.

மறுநாள் காலையில் அனைத்து ஜன்னல்களையும் அவர் மூடிவிட்டு தன்னுடைய குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போதும் அங்கு ஒரு மலைப்பாம்பு வந்ததை கண்டு நிக்கோல் பேரதிர்ச்சி அடைந்தார்.

மீண்டும் வால்டனை அழைத்து, பாம்பை பிடித்து செல்லுமாறு கேட்டுள்ளார். அதன்படி வால்டன் வந்த மலைப்பாம்பை பிடித்து சென்றார். 

ஆஸ்திரேலியா நாட்டில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இதனால் பாம்புகள் குளிர்ச்சியான இடங்களில் தங்குவதற்கு முயற்சிக்கின்றன.  வெப்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக பாம்புகள் தொடர்ச்சியான இடங்களில் வந்து தங்குகின்றன. 

இந்த சமயம் பார்த்து ரெடியா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.