குடியிருப்புக்குள் 30 முட்டைகள் போட்டு குடும்பம் நடத்திய பிரமாண்ட மலைப்பாம்பு! அதிர்ச்சியில் உறைந்த நெல்லை!

பாளையங்கோட்டையில் 30 முட்டைகளை அடைகாத்து வந்த 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறை அதிகாரிகள் பிடித்து சென்ற சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


திருநெல்வேலி மாவட்டத்தை 1992-ஆம் ஆண்டில் பலத்த புயல் ஒன்று தாக்கியது. அப்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றில் இருந்த பல்வேறு மலைப்பாம்புகள் குடியிருப்புப் பகுதிகளிலும், வயல்வெளிகளிலும், அடர்ந்த காடுகளிலும் தஞ்சம் புகுந்தன. கடந்த வரலாற்றில் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் இருந்து பல்வேறு மலைப்பாம்புகளை வனத்துறையினர் மீட்டு சென்றது குறிப்பிடத்தக்கது.‌

பாளையங்கோட்டையில் உள்ள கிருபா நகர் பகுதியில் தினேஷ் குமார் என்பவர் மீன் பண்ணையை நடத்தி வருகிறார். இந்நிலையில், அவருடைய மீன்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போக தொடங்கின. சந்தேகித்த தினேஷ் பண்ணையின் சுற்றுப்புறத்தில் சோதனை நடத்தினார். அப்போது அருகில் இருந்த ஒரு குழியிலிருந்து 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று மீன் கழிவுகளை உண்ன வந்தது.  

இதனை கண்டவுடன் வனத்துறை அதிகாரிகளுக்கு தினேஷ் தகவல் தெரிவித்தார். வனத்துறை அதிகாரிகள் மலைபாம்பானது குழிலிருப்பதை உறுதி செய்தனர். குழியில் சுமார் முப்பது பாம்பு முட்டைகளை மலைப்பாம்பானது பாதுகாத்து கொண்டிருந்தது.

ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பை பிடித்தனர். பின்னர் முட்டைகளையும் பத்திரமாக மீட்டனர். முட்டைகள் வளர்ந்த பிறகு வனத்தில் விட வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த சம்பவமானது பாளையங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.