குடித்துவிட்டு ரோட்டில் கூத்தடிக்கும் பெண்கள்..! பிடித்து ஜெயிலில் போட சென்னையில் தனி போலீஸ் படை ரெடி!

போக்குவரத்து போலீசாருக்கான ஸ்மார்ட் ரோந்து வாகன சேவை இன்று தொடங்கப்பட்டது.


விதிமுறைகளை மீறும் பெண்களை பிடிக்கவும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டும் பெண்களை பிடிக்கவும் பெண் காவலர் தனிப்படை திட்டமும் இன்று தொடங்கப்பட்டது. இந்த தொடக்கவிழாவில் பேசிய கமிஷனர் அவர்கள் வாகன ஓட்டிகள் பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் வாகனங்களை தணிக்கை செய்ய பெண் காவலர் தனிப்படை குழு இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னையில் ஒவ்வொரு தனி படையிலும் ஒரு பெண் உதவி ஆய்வாளர், ஒரு தலைமை காவலர் மற்றும் இரண்டு காவலர்கள் அடங்கிய குழு இடம்பெறும் எனவும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் சென்னையில் தெற்கு, கிழக்கு ,வடக்கு, மேற்கு என 4 மண்டலத்திற்கும் ஒவ்வொரு தனிப்படை அமைக்கப்பட்ட உள்ளதாகவும் அவர் கூறினார். 


விதிமுறைகளை மீறும் பெண்களை பிடிக்கவும் குடிபோதையில் வாகனங்களை ஓட்டும் பெண்களை பிடிக்கவும் இந்த தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.