சதுரகிரி மலையில் சாமியாரின் எலும்புக் கூடு! பீதி கிளப்பும் சம்பவம்!

சதுரகிரி மலை வனப்பகுதியில் சாமியார் ஒருவரின் உடல் எலும்புக்கூடாக இருப்பதை கணக்டெக்கப்பட்டுள்ளது.


விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு மேற்கு தொடர்ச்சிமலை அமைந்துள்ளது. மலையை சுற்றியுள்ள வனப்பகுதி மிகவும் பரந்து விரிந்தது. இங்குள்ள சுந்தரமகாலிங்கம் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. 

இதற்கருகே தாணிப்பாறை வனப்பகுதியில் நிறைய மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. உடனடியாக வனத்துறையினர் காவல்துறையினரின் உதவியுடன் சதுரகிரி வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

பல இடங்களில் தேடிய பின்னர் காவல்துறையினருக்கு காவியுடை, மண்டையோடு, கைத்தடி, ருத்ராட்ச கொட்டை முதலியன கிடைத்துள்ளன. இவற்றை அடிப்படையாக வைத்துக்கொண்டு அவை ஒரு சாமியாருடையது என்று காவல்துறையினர் வியூகிக்கின்றனர்.

கிடைத்த தடயங்களை பிரேத பரிசோதனைக்காக காவல்துறையினர் அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் யார் அந்த சாமியார்?? அவர் கொலை செய்யப்பட்டாரா?? ஆகியவற்றைக் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்த முடிவெடுத்துள்ளனர். இந்த சம்பவமானது சதுரகிரி வனப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.