இஸ்ரோ சிவன் கண்ணீர் தற்காலிகமானது! அவர் மீண்டு வந்து சாதிப்பார்! உருகும் கன்னியாகுமரி உறவுகள்!

விக்ரம் லாண்டர் தோல்வியிலிருந்து இஸ்ரோ தலைவர் சிவன் நிச்சயம் மீண்டு வருவார் என்று அவருடைய குடும்ப உறவுகள் நம்பிக்கையாக உள்ளனர்.


உலகம் முழுவதும் நேற்று இந்தியாவை உற்று நோக்கி கொண்டிருந்தது. சந்திராயன்-2 விண்கலம் நிலவில் சென்றடைய வேண்டிய நாளான நேற்று, வெறும் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் அதன் விக்ரம் லாண்டர் விழுந்து நொறுங்கியது.

இது எதிர்பார்ப்பிலிருந்த கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. இஸ்ரோ நிறுவன தலைவர் சிவன் ததும்ப ததும்ப குரல் குழைந்து பேசினார். அவரின் கண்களில் கண்ணீர் பெருகியது. உடனடியாக பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

இந்த சம்பவம் குறித்து இஸ்ரோ நிறுவன தலைவரின் உறவினர்கள் பெருத்த சோகமடைந்துள்ளனர். சிவன் அவர்களின் மாமா உறவான சண்முகவேல் என்பவர் கூறுகையில், "சிவனின் முயற்சி தோல்வி அடைந்ததை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. நிச்சயமாக அவர் இதனை தோல்வியாக கருதமாட்டார்.

அவர் இதனை ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் சிறு வயதிலேயே நிறைய சவால்களை சந்தித்து அவற்றை நொறுக்கி அடித்தவர். இது அவருக்கு ஒன்றும் பெரிதல்ல" என்று கூறினார்.

அவருடைய மனைவியான தங்கம் கூறுகையில், "சிவனின் கண்ணீர் தற்காலிகமானது. கூடிய விரைவில் அதனை சந்தோஷமாக மாற்றிக்காட்டுவார். சிவனின் இத்தனை கால உயர்வுக்கும்,  முயற்சிக்கும் அவருடைய மனைவியான மாலதி மிகவும் முக்கியமானவர். அவரின் பலமே சிவனின் பலம்" என்று கூறினார்.

விஷ்வா நிறுவனத்தலைவர் நிச்சயமாக மீண்டுவந்து, மீண்டும் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.