No Crackers. Let's celebrate pollution free Diwali" அப்படின்னு Spicejetகாரன், மதுரை ஏர்போர்ட்டில் ஒரு ஹோர்டிங் வைத்திருக்கிறான்..
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு எதிராக ஒன்று சேர்ந்த சிவகாசிக்காரர்கள்! தெறிக்கும் சோசியல் மீடியா! காரணம் என்ன?
சிவகாசில இருந்து வெறும் 65கி.மீ.ல், சிவகாசி முதலாளிகள் அடிக்கடிப் பயன்படுத்தும் ஒரு விமானநிலையத்தில் இப்படி ஒரு ஹோர்டிங்கைப் பார்த்தால் சும்மா விடுவானா சிவகாசிக்காரன்?? தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் SpiceJet கம்பெனியைக் கிழித்துத் தொங்க விட்டுவிட்டார்கள்..
'Pollution free Diwali, green crackersனு எல்லாம் பேசுறியே, நீ என்ன pollution free விமானம் ஓட்டுறியா? இல்ல, ஒயிட் பெட்ரோலுக்குப் பதிலா க்ரீன் பெட்ரோல் போட்டு ஓட்டுறியா?? விமானத்தில் போகிற ஒவ்வொரு பயணிக்கும் சராசரியாக அந்த விமானம் 285கிராம் கார்பன் டையாக்ஸைடை வெளியிடுகிறது ஒவ்வொரு கி.மீ.க்கும்.. அதுவே ரயிலில் வெறும் 14கிராம் தான்..
தினசரி இத்தனை மோசமாகச் சுற்றுச்சூழலை அழிக்கும் நீ அந்த மாதிரி ஹோர்டிங்கை உன் கம்பெனி வாசலில் தான் முதலில் வைக்கணும்.. அதே மாதிரி, உன் ஃப்ளைட் கம்பெனியை மூடிட்டு, விமானத்தை எல்லாம் பழைய இரும்புக் கடைல போட்டுடு ராசா.. அப்புறமா எங்கத் தொழிலைப் பத்திப் பேசு' எனப் பயங்கரக் காட்டமாகவே ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்..
'ஏன் தம்பி, ஒயிட் பெட்ரோல் போட்டுட்டு நேரா ஓசோன் லேயர்ல ஓட்டை போடுற நீயெல்லாம் environment பத்திப் பேசலாமா?'ன்னு ஒரு பன்ச்சோடும் முடித்திருக்கிறார்..
பதறிப்போன SpiceJet நிறுவனம் அவசர அவசரமாக 'அது எங்கள் விளம்பரமில்லை, விமான நிலைய அதிகாரிகள் யாரோ வைத்தது' என சமாளித்தார்கள்.. அந்த விளம்பரப் பதாகையும் உடனடியாக நீக்கப்பட்டிருக்கிறது.. நாட்டுல எவன் எவனெல்லாம் அட்வைஸ் பண்ணுறதுன்னு வெவஸ்தையே இல்லாமப் போயிருச்சி..
சமூகத்துக்கு மெசேஜ் சொல்ற முக்காவாசி ஆளுங்க நம்ம SpiceJet மாதிரி டுபாக்கூராத் தான் இருக்காய்ங்க.. செருப்பால அடிக்க எங்க ஊர்க்காரர் மாதிரி சிலரும் இருப்பதால் தான் இந்த குபீர் புரட்சியாளர்களின் டவுசர்களும் உடனுக்குடன் உருவப்படுகின்றன..
சந்தோசமா புது ஜவுளி வாங்குங்க, வயிறு முட்ட தெகட்டத் தெகட்ட இனிப்புப் பலகாரத்தை மொக்குங்க, சளைக்கச் சளைக்க வெடி போடுங்கள்.. இது நம்ம தீபாவளி..