சிவகார்த்திகேயன் போட்டது கள்ள ஓட்டு தான்! நடவடிக்கை உறுதி! தேர்தல் ஆணையம் அதிரடி!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கடந்த 18-ம் தேதியன்று நடந்தது. 39 மக்களவைத் தொகுதிகளிலும் எந்த விதமான பெரிய அசம்பாவிதங்களின்றி சுமூகமாக நடைப்பெற்றது. மக்கள் பலரின் பெயர்களும் வாக்காளர் பதிவிலிருந்து நீக்கப்பட்டதாக அன்று முழுவதும் பெரும் பரபரப்பாக இருந்தது.


அன்று காலை நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களிக்க வடபழனியில் உள்ள ஒரு வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு அவரின் பெயர் பதிவில் இல்லை. நீண்ட நேரம் அலைந்து திரிந்தப்பின் வாக்களித்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை பகிர்ந்தார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏனென்றால் லட்சக்கணக்கான சாதாரண மக்களுக்கும் இந்த தவறு நிகழ்ந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு வாக்களிக்க உரிமை வழங்கவில்லை. இவருக்கு மட்டும் அனுமதியளித்திருப்பது மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை உருவாக்கியுள்ளது.

இதைப்பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம் கேள்வி எழுந்தது. அதற்கு அவர் இது தவறென்றும், இதற்கு காரணமாக இருந்த அதிகாரி தண்டிக்கப்படுவார்கள் என்று உறுதி அளித்துள்ளார்.