இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா திருமணத்திற்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஒரு குறும்படத்தில் ரொமான்ஸ் செய்வது போன்ற காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
திருமணத்திற்கு முன் சிவகார்த்திகேயனுடன் செம ரொமான்ஸ்..! அட்லி மனைவி பிரியாவின் வைரல் வீடியோ உள்ளே!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்குபவர் இயக்குனர் அட்லி ஆவார். இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல் போன்ற பல்வேறு வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சீரியல்கள் மற்றும் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்டார். நடிகை பிரியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு சில குறும் படங்களில் நடித்து வந்த இவர் சிங்கம் மற்றும் நான் மகான் அல்ல ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை ப்ரியா தனது திருமணத்திற்கு முன்பு இருந்து நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆவார். இதனால் நடிகர் சிவகார்த்திகேயனும் நடிகை பிரியாவும் இணைந்து ஒரு குறும் படத்தில் ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். இந்த குறும்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனும் நடிகை பிரியாவும் ரொமான்ஸ் செய்வது போல காதல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றன.
இதன் பிறகு இயக்குனர் அட்லி நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து முகப்புத்தகம் என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். அதன் பிறகுதான் நடிகர் சிவகார்த்திகேயன் பிரியாவை இயக்குனர் அட்லிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதன் பின்னர் நண்பர்களாக இருந்து வந்த அட்லி மற்றும் பிரியா காதலித்து பின்னர் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.