கண்ணின் மணி..கண்ணின் மணி..! கதை கேளம்மா! மீண்டும் வருகிறார் சித்தி! சன்டிவியில் ஒளிபரப்பாகும் சீசன் 2!

ராடான் நிறுவனம் சார்பில் , நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் சித்தி 2 சீரியல் மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாக போகிறது.


கடந்த 1999 முதல் 2001 ஆம் ஆண்டு வரை சித்தி சீரியல் சன் டிவியில் ராடான் நிறுவனத்தின் சார்பில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடித்திருந்தார். தினந்தோறும் இரவு 9:30 மணி முதல் 10 மணி வரை சித்தி சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. உலகில் வாழும் எல்லா தமிழர்களின் வீட்டிலும் சித்தி தொடர் மிகவும் பிரபலமடைந்தது. போகப்போக 9:30 மணி முதல் 10 மணி வரை வரும் எல்லா சீரியல்களும் ராடான் நிறுவனத்தின் சீரியல்கள் ஆகவே அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

சித்தி சீரியல்க்கு பின்பு செல்லமே, வாணி ராணி என பல வெற்றி சீரியல்கள் சீரியலில் நிறுவனத்திற்கு அமைந்தன. கடைசியாக ஒளிபரப்பப்பட்ட சந்திரகுமாரி நடிகை ராதிகா நடித்திருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிறிதுகாலம் மட்டுமே நடித்து இருந்தார். இதனையடுத்து இந்த சீரியலின் நேரம் சன் டிவியில் மாற்றப்பட்டது. இவை அனைத்தும் சேர்ந்து ராடான் நிறுவனத்திற்கு பெரிய இழப்பையும் நஷ்டத்தையும் ஏற்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நஷ்டத்தை சரி செய்வதற்கு ஒரே வழி சித்தி போன்ற சீரியல் மீண்டும் எடுப்பது மட்டும்தான் என்று ராடான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 

இதனையடுத்து சித்தி 2 படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . இந்த சீரியலில் ராதிகா சரத்குமார் , முன்னாள் நடிகை ரூபினி, பொன்வண்ணன் ,டேனியல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். விரைவில் சன் டிவியில் அதே 9.30 மணி ஸ்லாட்டில் சித்தி-2 ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது . வரும் தீபாவளிக்கு சித்தி-2 பற்றிய தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.