தாயுடன் தனிமையில் வசித்து வரும் நடிகை சீதா..! விவாகரத்து, பிரேக் அப்பிற்கு பிறகு எப்படி இருக்கிறார் தெரியுமா?

ஊரடங்கு உத்தரவால் நாம் முடங்கிக் கிடந்தாலும் விலகி இருக்கும் உறவுகளுடன் பேசி மகிழ ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக நடிகை சீதா தெரிவித்துள்ளார்.


கொரனா அச்சம் காரணமாக உலகத்தில் 192 நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அடுத்து என்ன செய்வது என தெரியாமல் ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. ஆயுதங்களில் வல்லரசு நாடு என மார்தட்டிக்கொண்ட நாடுகள் கூட கண்ணுக்குத் தெரியாத கிருமியை சமாளிக்க முடியாமல் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் மருத்துவ உதவி கேட்டு நிற்கின்றன. இந்நிலையில் கொரனா பாதிப்பு குறித்தும், ஊரடங்கு உத்தரவு குறித்தும் நடிகை சீதா கருத்து தெரிவித்துள்ளார்.

சீதா தமிழ்த் திரையுலகில் ஆண்பாவம் திரைப்படத்தின் முலம் அறிமுகம் ஆகி சங்கர் குரு, குருசிஷ்யன், பெண்மனி அவள் கண்மனி, உன்னால்முடியும் தம்பி, புதிய பாதை என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகரும் இயக்குநருமான பார்த்திபனை திருமணம் செய்து கொண்ட இவர் பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். தற்போது தாயுடன் வசித்து வருகிறார். ஊரடங்க குறித்து நடிகை சீதா பேசுகையில் வேலை வேலை என அலைந்து திரிந்து கொண்டிருந்த நாம் இப்போது வீட்டுக்குள் அடங்கி இருக்கிறோம்.

தற்போது போக்குவரத்து நெரிசல், வாகனப் புகை இல்லாமல் ஒலி மாசு இல்லாமல் உலகமே அமைதி பூங்காவாக உள்ளது. நான் தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுகிறேன். பாடல்கள் கேட்கிறேன். நேரம் போவதே தெரியாது. என்னுடைய தாய், தந்தையுடன் அரட்டை அடித்துவிட்டு தூங்கச்செல்வேன். எனவே மக்கள் அனைவரும் அரசு வேண்டுகோளுக்கிணங்க வீட்டிலேயே இருந்து கொரனா நோயை விரட்டவேண்டும் என சீதா கேட்டுக்கொண்டுள்ளார்.