தங்கையை கட்டி அணைத்த படியே மண்ணுக்குள் புதைந்த சகோதரி! கடவுளின் தேசத்தில் நேர்ந்த துயரம்!

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்ட அக்கா-தங்கை நினைத்தபடியே மண்ணில் புதைந்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த ஒரு வார காலமாகவே கேரள மாநிலத்தில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. வியாழக்கிழமையன்று ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40-க்கும் வீடுகள் மண்ணோடு புதைந்தன. குழந்தைகள் உட்பட ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். ஏராளமானோர் நிலச்சரிவில் மாயமாயினர். 

இந்நிலையில் அவர்களை மீட்கும் பணியானது விரைந்து நடைபெற்று வருகிறது. தேடுதலில் ஈடுபட்ட வீரர்கள் இன்று காலையில் அணைத்தபடியே மண்ணில் புதைந்த அக்கா-தங்கை ஜோடியை நினைத்த சம்பவமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கேரளா மாநிலத்தில் நிலம்பூர் என்னும் நகரம் அமைந்துள்ளது. நகரத்திற்கு உட்பட்ட சிறிய காவலப்பரா என்னும் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் விக்டர் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் தோம்மா. இவர்களுடைய வீடானது மலைஉச்சியில் அமைந்துள்ளது. இந்த வீட்டில் மொத்தம் ஐந்து குழந்தைகள் இருக்கின்றனர்.

அவர்களுள் அலனா மற்றும் அலீனா சகோதரிகளாவர். இருவருக்கும் இடையே மிகுதியான பாசம் உள்ளது. உறங்கும்போது கூட இருவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்தபடி உறங்குவர். இதனைக் கண்ட அவர்களின் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சம்பவத்தன்று இருவரும் வழக்கம் போலவே ஒன்றாக உறங்கிக் கொண்டிருந்தனர். நிலச்சரிவு ஏற்பட்ட போது மீதி 3 குழந்தைகளையும் பெற்றோரால் காப்பாற்ற முடிந்தது. ஆனால் சகோதரிகளை அவர்களால் காப்பாற்ற இயலவில்லை.

திங்கட்கிழமை காலையில் மீட்பு பணியினர் மீட்பு பணியில் ஈடுபட்ட போது கட்டி அணைத்த படியே இருவரும் மண்ணில் புதைந்து சடலமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். சடலமாக கிடந்த பிள்ளைகளை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்த சம்பவமும் எனது அப்பாவின் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.