கோவிலுக்கு சென்ற தாய் - தந்தை..! வீட்டில் தனியாக இருந்த தங்கையின் வயிற்றில் வளரும் கருவை கலைத்து அண்ணன் செய்த செயல்! வைரல் வீடியோ உள்ளே!

அண்ணன் தன்னுடைய தங்கைக்கு தக்க தருணத்தில் தாயைப் போன்று சேவகம் செய்யும் குறும்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இளைஞர்கள் பலர் தங்களுக்கு தெரியாத பெண்களை பார்க்கின்றபோது அவர்களை காமப்பொருளாகவே சித்தரிக்கின்றனர். இத்தகைய சீர்கெட்டு தெரியும் உலகில் என் தங்கைக்கு ஏற்பட்ட அவலத்தை அறிந்தவுடன் அண்ணன் தாயாக மாறி அவளுக்கு பணிவிடை செய்யும் குறும்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது 2 இளைஞர்கள் குறும்படத்தின் தொடக்கத்தில் பெண்களை எவ்வாறு மடக்கி உல்லாசம் அனுபவிப்பது என்பது குறித்து பேசுகின்றனர். அப்போது ஒரு இளைஞர், தான் 2 பெண்களுடன் உறவு கொண்டதாக தன் நண்பரிடம் கூறுகிறார். மேலும் எவ்வாறு பெண்களை எளிதாக மடக்குவது என்பது குறித்து, அந்த நபர் தன் மற்றொரு நண்பரிடம் கூறுகிறார்.

அப்போது அந்த மற்றொரு நபருக்கு அவருடைய பெற்றோர் கால் செய்து ஊருக்கு சென்றிருப்பதாக கூறி, தங்கையை பார்த்து கொள்ளுமாறு கூறுகின்றனர். அதன்படி அந்த இளைஞர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இளைஞர் எதோ ஒரு துணிக்கடையில் துணி எடுத்து கொண்டிருந்தபோது, அந்த நண்பர் அவருக்கு கால் செய்து தங்கை மருந்து கடையில் பிரசவ பரிசோதனை கிட் வாங்குவதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ந்து போன அந்த இளைஞர் உடனடியாக வீட்டிற்கு சென்று தன்னுடைய தங்கையிடம் விசாரிக்கிறார். அப்போது தன்னை அந்த இளைஞர் ஏமாற்றிவிட்டதாக கூறு கதறி அழும்போது இளைஞரால் தாங்க இயலவில்லை. அவனை பற்றிய புகைப்படங்களை வாங்கிக்கொண்டு, தன்னுடைய நண்பனிடம் சென்று காண்பிக்கிறார். நண்பன் அந்த இளைஞரை சும்மா விட்டுவிட கூடாது என துடித்த போது, "நம்முடைய தங்கைகளுக்கு நடந்தால் தப்பு; மற்ற பெண்களுக்கு செய்ய நினைக்கும்போது குதூகலமாக இருக்கிறதா" என்று தன் நண்பனை பார்த்து அந்த பொறுப்புள்ள அண்ணன் கேட்டபோது, நண்பர் கண் கலங்கினார்.

உடனடியாக தன் தங்கையை அழைத்துக்கொண்டு கருக்கலைப்பு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் மன்றாடி தன் தங்கையின் கருவை கலைத்துவிட்டார். அதன் பின்னர் அவருடைய தங்கைக்கு வீட்டிற்கு வந்தவுடன் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய தங்கைக்கு சானிட்டரி நாப்கின்களை வாங்கிக்கொடுத்து அனைத்து பணிவிடைகளையும் அந்த சகோதரர் செய்து தந்துள்ளார்.

இந்த குறும்படமானது சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சண்டைகளை போட்டுக்கொண்டாலும் தேவைப்படும் நேரத்தில் அண்ணன்கள் தாயாகவும் மாறிவிடுவர் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வீடியோ அமைந்துள்ளது‌.