விபத்தில் துடிதுடித்து உயிரிழந்த அண்ணன்! உடன் இருந்தும் தெரியாமல் தாலி கட்டிக் கொண்ட தங்கை! நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

அண்ணன் இறந்த சம்பவம் தெரியாமல் தங்கை திருமணம் செய்து கொண்டது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் சின்னமணலி எனும் பகுதி அமைந்துள்ளது. இங்கு சரஸ்வதி என்பவர் வசித்து வந்தார். இவருடைய வயது 65. இவருக்கு மஞ்சுநாதன் என்ற மகனும், அபிராமி என்ற மகளும் இருந்தனர். மஞ்சுநாதன் சென்னையில் பணிபுரிந்து வந்தார். 

இதனிடையே திருமண வயதை எட்டியதால் அபிராமிக்கு அவர்கள் வீட்டில் திருமண ஏற்பாடு செய்தனர். திருமணத்திற்காக இன்று அதிகாலை காரில் மஞ்சுநாதன், சரஸ்வதி, முகிலன் ஆகியோர் புறப்பட்டனர். அதே ஊரை சேர்ந்த ஆனந்த்குமார் என்பவர் ஓட்டினார்.

அதிகாலை 6 மணியளவில் அம்பாசமுத்திரத்திற்கருகே காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையிலிருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் காரின் முன்பக்கமானது பலமாக நொறுங்கியது. 

மஞ்சுநாதனின் தலையில் பலமாக அடிபட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த சரஸ்வதிக்கும், முகிலனுக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அருகிலிருந்த பொதுமக்கள் அவர்களின் மீட்டனர். மேலும் மஞ்சுநாதன் இறந்த செய்தியை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று அவருடைய உறவினர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி அபிராமியிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் திருமணத்தை நடத்தினர். திருமணம் நடந்து முடிந்த பின்னரே அபிராமியிடம் அவர் அண்ணன் இறந்த செய்தியை கூறியுள்ளனர்.

இந்த சம்பவமானது சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.