பலர் முன்னிலையில் ஆடைகளை களைந்து உள்ளாடையுடன் நின்ற பிரபல பாடகி! விமானத்தில் அரங்கேறிய பகீர் சம்பவம்! பரபரப்பு காரணம்!

அமெரிக்கன் விமானத்தில் விமானியின் மேலாடையை அவிழ்க்க சொன்ன சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அமெரிக்கா நாட்டில் புகழ்பெற்ற பாடகர்களுள் ஆப்ரே என்பவரும் ஒருவர். தனக்கு விமானநிலையத்தில் நிகழ்ந்த கொடூரத்தை அவர் வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்ரேவின் மேலாடையில் ஆபாசமான வார்த்தைகள்  பொறிக்கப்பட்டிருந்தன. அந்த மேலாடையுடன் அவர் விமானத்திற்குள் ஏறினார். இதனை பார்த்த விமான அதிகாரி ஒருவர் அவரை மேலாடையை கழுட்டுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆப்ரே முதலில் அதிர்ச்சி அடைந்தார். வேறு வழியின்றி அவள் மேலாடையை கழுற்றி உள்ளாடையுடன் நின்று கொண்டிருந்தார். விமானத்தில் இருந்த சக பயணி அவருக்கு ஆடை கொடுத்து உதவினார்.

இந்த சம்பவமானது அந்த விமான நிலையத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்சாட்டுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளது. "நீங்கள் பயணித்த விமானத்தில் விவரங்களை தாருங்கள். உடனடியாக நாங்கள் விசாரணையை தொடங்குகிறோம். உங்கள் பிரச்சனை எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்" என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள ஆப்ரே,"அதிகாரியின் பெயரை ஏற்கனவே குறிப்பிட்டுவிட்டேன். இது தொடர்பாக உங்களிடம் பேச எனக்கு விருப்பமில்லை" என்று கூறியுள்ளார்.

விமானத்தில் பயணம் செய்த பயணிகள் கூறுகையில், "உடைய மாற்ற முடியுமா என்றுதான் அதிகாரி கேட்டார். அதற்கு அவர் முடியாது என்று அடம்பிடித்தார். மேலாடையை திருப்பி போட்டு வருமாறு அவர் அறிவுறுத்தினார். அதற்கு கழிப்பறைகள் செய்யாமல் அனைத்து பயணிகளின் முன்பே அவர் மேலாடையைக் கழற்றினார்" என்றனர்.

இந்த சம்பவமானது அமெரிக்கன் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.