தனுஷ் - சின்மயி..! ஹன்சிகா பாத்டப் வீடியோ..! சுச்சி லீக்ஸ் வெளியானது எப்படி? 3 வருட ரகசியம்!

சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் திரையுலக பிரபலங்களின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் எவ்வாறு வெளியானது என்று பிரபல பாடகி சுசித்ரா மனம் திறந்துள்ளார்.


பின்னணி பாடகி, ஆர் ஜே, தொகுப்பாளினி போன்ற பல்வேறு துறைகளில் கலக்கி வந்தவர் சுசித்ரா ஆவார். பல்வேறு ஹிட் பாடல்களை பாடிய இவர் பிரபல திரைப்பட நடிகர் கார்த்திக் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் திரையுலகில் கலக்கி வந்தார் பாடகி சுசித்ரா . இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து தமிழ் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகிய வண்ணம் இருந்தன. பல நடிகைகளின் நிர்வாண புகைப்படமும் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் வெளியானது. இதனால் தமிழ் திரையுலகமே பெரும் அதிர்ச்சி அடைந்தது. அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் புகைப்படத்தில் இருப்பவர்கள் நாங்கள் இல்லை என்றும் திரைப் பிரபலங்கள் பலர் மறுப்பு தெரிவித்தும் வந்தனர்.

இதனால் நெருக்கடிக்கு உள்ளான பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் அக்கவுன்ட்டை யாரோ ஹேக் செய்து விட்டார்கள் என்று கூறினார். அவரது கணவர் நடிகர் கார்த்திக் குமார் சுசித்ராவுக்கு மனநிலை சரியில்லை. அதனால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் பாடகி சுசித்ரா இந்த சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வந்ததால் அவரது கணவரும் சுசித்ராவை விவாகரத்து செய்து கொண்டார். அதற்கு பிறகு நீண்ட நாட்கள் அவரைப் பற்றி எந்த செய்தியும் வராத நிலையில் சில மாதங்களுக்கு முன்பு நடிகை சுசித்ரா தற்கொலைக்கு முயன்றதாகவும் , திடீரென காணாமல் போனதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் பாடகி சுசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நான் இப்போது பழைய சுசித்ரா இல்லை. 100% நான் மாறிவிட்டேன். கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான ஏற்றத்தாழ்வுகளை நான் சந்தித்துள்ளேன். என்னுடைய இருண்ட நாட்களில் நான் சமையலை கற்றுக் கொண்டேன் .இப்போது சமையல்தான் என்னுடைய ஹாபி. சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் எனது அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டது என்று நான் பலமுறை அறிக்கை வெளியிட்டு இருந்தேன். நான் ஒரு முக்கிய தமிழ் சேனலுக்கு ஒரு அறிக்கையை கொடுத்து இருந்தேன். ஆனால் வலைத்தளங்கள் உருவாக்கிய சத்தத்தில் அது மூழ்கிவிட்டது . இதனால் நான் டிப்ரஷன் ஆனேன்.

அந்தக் கட்டத்தில்தான் எனக்கு சமையல் கைகொடுத்தது. நான் ஒரு வருடம் தொழில் முறை சமையல் படிப்பு படித்தேன். சுச்சி லீக்ஸ் பற்றி ஊடகங்களும் குழப்பம் அடைந்ததால் நான் அவர்களை குறை சொல்ல விரும்பவில்லை. பிரபலங்களின் தனிப்பட்ட வீடியோக்களை பகிர்ந்தது யார்? அந்த வீடியோ களுக்கான ஆக்ஸஸ் யாருக்கு கிடைத்தது? இந்த சம்பவத்தின் பின்னால் எந்த பெரிய கை இருந்தது? இந்த சம்பவங்கள் எல்லாம் என்னை மிகவும் உலுக்கியது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் அந்த வீடியோக்களில் ஒன்றைக்கூட இதுவரை பார்த்ததில்லை எனவும் அந்தப் பேட்டியில் பாடகி சுசித்ரா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.