பிரபல நடிகைகள் கூட அட்ஜெஸ்ட்மென்டுக்கு தயாராக உள்ளனர்! உண்மையை போட்டு உடைத்த எஸ்.பி.பி.,!

நடிகைகள் ஆடை அணிவது குறித்து பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கூறிய கருத்து சர்ச்சையாகியுள்ளது.


தமிழ் தெலுங்கு கன்னட திரையுலகில் 16 மொழிகளில் 40 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை படைத்தவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம். இசையமைப்பாளர் , திரைப்பட தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் எஸ்.பி.பி. என அழைக்கப்படும் பாலசுப்பிரமணியம். இவர் அரையும் குறையுமாக ஆடை அணியும் நடிகைகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். 

 

தற்போது உள்ள நடிகைகள் எந்த நிகழ்ச்சிகளுக்கு என்ன மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என்பதை அறியாதவர்களாக உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு என்ன உடை அணிய வேண்டும் , வெளியில் செல்லும் பட்சத்தில் என்ன மாதிரியான ஆடை அணிந்து செல்ல வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை என்றும் நடிகைகளை குறை கூறியுள்ளார்.

 

   கவர்ச்சி ஆடைகளையே நடிகைகள் அதிகம் அணிவதாக கூறியுள்ள எஸ் பி பாலசுப்பிரமணியம், இதை அப்பாவித்தனம் என்று எடுத்துக் கொள்வதா அல்லது நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை கவர்வதற்காகவா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கலாச்சாரமானது தற்போது மிகவும் கீழ்தரமாக சென்று கொண்டிருப்பதாக அவர் சாடி இருக்கிறார்.

 

   கடுமையாக அவர் பேசியுள்ள போதும் தனது கருத்தை எந்த நடிகைகளும் தவறாக எடுத்துக் கொண்டாலும் தனக்கு அது பற்றி கவலை இல்லை என்றும் கெத்தாக கூறியிருக்கிறார். நடிகைகள் கோபப்பட்டாலும் தான் அதை மனதில் நினைத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் எஸ்பி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

 

  ஆனால் இது அனைத்தையும் தெலுங்கில் அவர் பேசினார். இறுதியாக உரையை முடித்த அவர் இங்குள்ள பெரும்பாலான நடிகைகளுக்கு தெலுங்கு தெரியாது என்பதால் அவர்களுக்கு தனது கருத்து புரியாது என்றும் குறிப்பிட்டார்.

 

   திரையுலகில் வாய்ப்புகளுக்காக நடிகைகள் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஹீரோக்களை அட்ஜெஸ்ட் செய்வதாக ஒரு பேச்சு உண்டு. அதனை உண்மைதான் என்று சொல்லும் வகையில் எஸ்.பி.பியின் கருத்து இருக்கிறது.