ரொம்ப அர்ஜெண்ட்! ரெஸ்ட் ரூமுக்கு போக காரில் இருந்து இறங்கிய பாடகி மாலதி! அப்போது டிரைவரால் அவருக்கு ஏற்பட்ட விபரீத அனுபவம்! திக் திக் நிமிடங்கள்!

இக்கட்டான தருணங்களில் பெண்களுக்கு பொறுமை, நிதானம், தைரியம், தன்னம்பிக்கைதான் துணையாக இருக்கும் என பின்னணிப் பாடகி மாலதி லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.


`திருடா திருடி' படத்தில் பின்னணிப் பாடகி மாலதி பாடிய மன்மத ராசா பாடல் ஹிட் ஆனவுடன் தமிழ், தெலுங்கு சினிமாக்களில் தொடர்ந்து பிஸியாக இருந்து வந்தார். இது ஒருபுறம் இருக்க கச்சேரிகளுக்கும் போய் பாடி வந்தார் மாலதி லஷ்மன். நெல்லையில் இருந்து சென்னை வரும்போது தனக்கு ஏற்பட்ட திகில் அனுபவத்தை தற்போது பகிர்ந்து கொண்டுள்ளார் மாலதி லஷ்மன். 

திருமணம் ஆன புதிதில் இன்னிசைக் கச்சேரிகளுக்கு கணவருடன் சென்று வந்த மாலதி லஷ்மன் பின்னர் சினிமா வாய்ப்புகள் வந்தவுடன் தனியாகவே எல்லா இடங்களுக்கும் சென்று வருபவர். ஆரம்பத்தில் தனியாக செல்வதற்கு தைரியம் இல்லாவிட்டாலும் பின்னர் பழகிக்கொண்டு வெளியில் செல்கிறார்.

சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டடத்தில் உள்ள கிராமத்தில் இரவு கச்சேரியை முடித்துவிட்டு காரில் சென்னை நோக்கி சென்றுகொண்டிருந்தார். நீண்ட தூரம் என்பதால் அவருடைய காரை மாற்றி மாற்றி ஓட்ட 2 ஓட்டுநர்கள் வந்திருந்தனர். கார் மதுரை அருகே வரும்போது ஓட்டுநர்கள் மாற்றி ஓட்டுவதற்காக காரை ஓரமாக நிறுத்தி உள்ளனர்.

அப்போது இயற்கை உபாதைக்காக மாலதி லஷ்மன் காரை விட்டு இறங்கியுள்ளார். அவர் இறங்கியதை கவனிக்காத ஓட்டுநர்கள் காரை எடுத்துவிட்டு புறப்பட்டு விட்டனர். பின்னர் அங்கு வந்த மாலதி லஷ்மன் கார் செல்வதை பார்த்து நிறுத்துங்கள் என கத்தினார். ஆனால் அது அவர்களுக்கு கேட்கவில்லை.

இதனால் நடுஇரவில் தனிமையில் என்ன செய்வதென்று தவித்து வந்தார். தான் அணிந்திக்கும் உடை வேறு பளிச்சென்று இருந்ததால் கூடுதல் பயம் வந்துவிட்டது மாலதிக்கு. அப்போது அந்த வழியே வந்த லாரியை கை காட்டி நிறுத்தி, என்னை விட்டுவிட்டு ஓட்டுநர்கள காரை எடுத்து சென்றுவிட்டார்கள் அவர்களை பிடிக்க வேண்டும் என கூறினார்.

பின்னர் லாரி ஓட்டுநரும் அவரை அருகில் உள்ள டெலிபோன் பூத்துக்கு அழைத்து சென்றனர். அங்கிருந்து அவரது செல்போனுக்கு போன் செய்தார் மாலதி. அப்போதுதான் பின் இருக்கையில் மாலதி இல்லை என்பதை ஓட்டுநர்கள் உணர்ந்துள்ளனர். பின்னர் அவர் இருக்கும் இடம் கேட்டறிந்து மீண்டும் வந்து அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் அவர் லாரி ஓட்டுநருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து நன்றி தெரிவித்தார் மாலதி. இப்படிப்பட்ட இக்கட்டான தருணங்களில் பொறுமை, நிதானம், தைரியம், தன்னம்பிக்கைதான் எப்பவும் துணையாக இருக்கும் என்கிறார் பின்னணிப் பாடகி மாலதி லக்ஷ்மன்.