பாவம், புண்ணியத்தை இறைவன் எப்படி கணக்கிடுகிறார் தெரியுமா? கண்களே ஜாக்கிரதை!

புண்ணியமாக இருந்தாலும் பாவமாக_இருந்தாலும் நீ செய்தது உனக்கேசொந்தம்.


1)பாவத்தை விரும்பி செய்பவன் அதன் தண்டனையை அவன் விரும்பாவிட்டாலும் அனுபவித்து முடிக்க நேரிடும்.

2)பாவம் முதலில் கண்களின் மூலம் உருவாகின்றது கண்கள் சுத்தமானால் அனைத்தும் சுத்தமாகும்.

3)மனதினுடைய சிந்தனைகள் பாவத்தை படம் பிடிக்கின்றது.அந்த பாவத்தை செய்வதற்கு புத்தி தீர்மானிக்கின்றது. பிறகு செயல்கள் மூலமாக பாவம் வெளிப்படுகின்றது.

4)பாவம் கண்களின் மூலமாக சஞ்சலத்தை உண்டு பண்ணும் பொழுதே பார்வையை நேர்மையானதாக மாற்ற முயல வேண்டும். அது மேலும் பாவ சிந்தனையை உருவாகாமல் தடுத்துவிடும்.

5)பாவம் தன் மூலமாகவும் உருவாகிடக்கூடாது பிறர் மூலமாகவும் உருவாக்கப்பட கூடாது. இதற்காக சுய சோதனை செய்யவேண்டும் எங்கிருந்து பாவம் உருவாகின்றது என்பதை உற்று நோக்கி கவனித்து விலக்கவேண்டும்.

6)தனது செயல்களை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் இன்று நான் செய்த செயல்கள் சரியானதாக இருந்ததா? எவ்விதத்திலும் தவறு ஏற்படவில்லையே? பிறருக்கு துக்கத்தை கொடுத்ததா? எவ்விதத்திலும் பிறருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியதா? என்பதை சுய சோதனை செய்து சுயத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

7)யாருடனும் பாவத்திற்கு உடன்படக்கூடாது. யாரையும் பாவம் செய்வதற்கு உடன்படுத்த கூடாது. ஏனென்றால் பாவம் என்பது உயிருடன் எரியும் பிணக்கிடங்கில் தள்ளுவதை போல ஆகும். அந்த வேதனையின் குரல் யாருக்கும் கேட்காது. எனவே பாவம் செய்வதற்கு ஒருவர் பயந்து நடக்க வேண்டும்.

8)ஒரு பக்கம் பாவம் செய்து கொண்டே இன்னொரு பக்கம் புண்ணியமும் செய்தால் ஒருநாள் சேர்த்து வைத்த பாவம் அனைத்தும் செய்த புண்ணியத்தையும் சேர்த்து அழித்து விடும்.எனவே பாவ புண்ணிய கணக்கை இரவில் பரிசோதித்து விட்டு உறங்கச் செல்ல வேண்டும்.

9)ஒருவர் புண்ணியம் செய்யும் பொழுது அவர் மனதின் நிலை கவனிக்கப்படுகின்றது.அந்த மனதின் நிலையை பொறுத்தே புண்ணிய பலன்கள் கணக்கிடப்படுகின்றன .

10) நீ எந்த அளவு பிறர் உனக்கு செய்த துரோகத்தையும் பாவத்தையும் மன்னித்து விடுகின்றாயோ,அந்த அளவு உனது பாவங்களும் துரோகங்களும் தந்தை ஈசனிடத்தில் மன்னிக்கப்படுகின்றன.

11)உன்னை சார்ந்தவர்களுக்கும் உன் குடும்பத்திற்கும் நீ செய்வது உதவி. உன்னை யாரென்றே தெரியாத ஒருவருக்கு நீ செய்யும் உதவி தான் புண்ணியம்.

12)இறைவன் தனக்கு செய்யும் அபிஷேகத்தை விட இயலாதவர்களுக்கு செய்யும் உதவியை மட்டுமே பெரிதும் விரும்புகின்றார். எனவே, தன்னால் முயன்ற உதவிகளை பிறருக்கு செய்து பார். இறைவனுடைய மனமும் குளிரும் உனது புண்ணியக் கணக்கும் நிறையும். உன்னை துன்புறுத்தும் பிரச்சனைகள் யாவும் அகன்று வாழ்வில் ஒளி பிறக்கும்.

எனவே, நாம் செய்வது நமக்கே என்றுணர்ந்து, வாழும் வரை வாழ்வில் ஒருவர் சத்தியத்தை கடைபிடித்து இவ்வுலகிலிருந்து முக்தியடைய வேண்டும்.