செய்வினை தோஷத்தை விரட்ட இந்த எளிய பரிகாரத்தைச் செய்யலாம்

செய்வினை காரணமாக தொழில் நஷ்டம், வறுமை, பிள்ளைகள் கல்வி மந்தம், கடன் தொல்லை போன்றவை ஏற்படலாம். செய்வினை பாதிப்புக்கு குல தெய்வக் குற்றமும் காரணமாக இருக்கலாம்.


செல்வம் வரும் போது குல தெய்வத்தை மறந்து விடுவதே இதற்குக் காரணம் எனவே குடும்பத்தோடு குல தெய்வத்தை மூன்று பௌர்ணமிக்கு நேரில் சென்று வழிபட்டு வந்தால் ஒருவர் செய்த செய்வினை உங்களை பாதிக்காது.

ஒரு சனிக்கிழமையில் உங்கள் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள நவகிரகங்களுக்கு தேங்காய்-9, நாட்டு வாழைப்பழகம்- 18, கொட்டைப்பாக்கு-18, வெற்றிலை -18, கதம்பப்பூ- ஒன்பது முழம். பூஜைப் பொருட்களைக் கொண்டு வழிபாடு செய்தால், உங்களுக்குக் கெடுதல் செய்ய வைக்கப்பட்ட செய்வினை நீங்கும்.

முதலில் குலதெய்வத்துக்குக் காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். 27 எலுமிச்சைப் பழம் எடுத்து, அதனைச் சாறுபிழிந்து ஒரு பாத்திரத்தில் எடுக்க வேண்டும். (சாறோடு தேவையான அளவு தண்ணீர் கலந்து வைத்துக் கொள்ளலாம்) பிழியப்பட்ட சாறை, உங்கள் வீட்டைச் சுற்றியும், வியாபார இடத்தைச் சுற்றியும் வெளிப்புறமாக ஊற்றுங்கள் சாறு பிழியப்பட்ட எலுமிச்சைத் தோல்களை உங்கள் வீட்டு முன்பு வைத்து, அதனோடு 27 அரசங்குச்சிகளைச் சேர்த்து எரிக்க வேண்டும். அது சாம்பலானபின், அந்த சாம்பலை உங்கள் வியாபார ஸ்தலம், உங்கள் வீடு முதலிய இடங்களில் தூவி விடுங்கள். செய்வினை பறந்தோடிவிடும்.

யோக நரசிம்மரின் படத்தை வீட்டில் வைத்து தினமும் காலையில் நீராடிய பின்பு 12 தடவை வலம் வந்து வணங்கி வாருங்கள் செய்வினை தோஷம் இருந்தால் யோக நரசிம்மரின் சக்தியால் அது முறிந்து விடும்.

பேய், தீய ஆவிகளின் பாதிப்பு, மாந்திரீக பாதிப்புகள் கொண்டவர்கள் மிக பழமையான சக்திவாய்ந்த நரசிம்மர் கோவில்களான “சோளிங்கர் நரசிம்மர் கோவில், நாமக்கல் நரசிம்மர் கோவில், மதுரை ஒத்தக்கடை நரசிம்மர் கோவில்” ஆகிய ஏதேனும் ஒரு கோவிலுக் சென்று, வியாழக்கிழமையன்று அதிகாலை அக்கோவிலின் தீர்த்தத்தில் நீராடி, அந்த கோவில்களில் இருக்கும் நரசிம்மரை வழிபட்டு, நரசிம்மர் சந்நிதியின் தீர்த்த நீரை முகத்தில் தெளித்து கொண்டு, அக்கோவில் வளாகத்திலேயே சற்று நேரம் அமர்ந்து நரசிம்மரை தியானித்து உங்களின் செய்வினை பாதிப்புகள் நீங்க வேண்டும் என வேண்டும் பட்சத்தில், உங்களுக்கு ஏற்படும் கெடுதல்களை நீக்கி அருள் புரிவார் நரசிம்மர்.