அரசு ஊழியர்களுக்கு இனி வாரத்தில் 5 நாட்கள் தான் டூட்டி! முதலமைச்சர் திடீர் உத்தரவு!

வாரத்தில் இனி 5 நாட்கள் தான் பணி என்று முதலமைச்சர் அறிவித்ததால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.


புதிதாக நியமிக்கப்பட்ட  சிக்கிம் முதலமைச்சர்  கடந்த திங்கள் கிழமை அன்று  பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது சிக்கிமில் வாரத்தில் 6 நாட்களாக இருந்த அரசு ஊழியர்களின் வேலை நாட்களை 5 நாட்களாக குறைத்து முதலமைச்சர் பிஎஸ் கோலே உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பைக் கேட்ட அனைத்து அரசு ஊழியர்களும் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

சிக்கிமில் புதிய முதலமைச்சராக பதவியேற்றுள்ள பிஎஸ் கோலே, தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல வாரத்தில் 6 நாட்களாக இருக்கும் அரசு ஊழியர்களின் வேலை நாட்களை 5 நாட்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கு ஒருநாள் அதிகமாக விடுப்பு தரப்பட்டுள்ளது இந்த விடுமுறை நாளை அரசு ஊழியர்கள் தங்கள் உடல்நலத்தோடு குடும்பத்தினர் மற்றும் பெற்றோர், குழந்தைகளை நன்கு கவனிக்க நேரம் கிடைக்கும் என்று கோலே தெரிவித்துள்ளார்.

மேலும் தனக்கு முன் இருந்து அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடரும் என்றும் அவர் கூறினார். இதையடுத்து அரசு ஊழியர்கள் அனைவரும் ஏன் பொலேரோ காரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் வேறு எந்த ஒரு ஆடம்பர கார்களை பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அரசின் பணம் தேவை இல்லாத நிலையில் செலவிடப்படுவது தடுக்கப்படும் எனவே அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களது ஆடம்பர கார்களை விடுத்து அரசின் பொலேரோ வாகனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் சிக்கிம் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.