உலகை அச்சுறுத்தும் கொரானா வைரஸ்..! சித்தாவில் இருக்கிறதா மருந்து? தமிழனின் அசர வைக்கும் கண்டுபிடிப்பு!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சித்த மருத்துவம் உபயோகப்படும் என்று தமிழக சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


பல ஆண்டுகளுக்கு முன்னர் சீனா நாடு "சார்ஸ்" என்னும் நோயால் அவதிப்பட்டு வந்தது. இந்த நோயை ஏற்படுத்தும் கிருமிகள் வெகு விரைவாக அண்டை நாடுகளுக்கு பரவி தாக்குதல்களை நடத்தின. இதனால் உலகில் பல நாடுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். பின்னர் மருத்துவர்கள் இதற்கான தீர்வை கண்டுபிடித்ததன் மூலம் அந்த நோயிலிருந்து சீனா விடைபெற்றது.

ஆனால் கடந்த ஒரு மாத காலமாக சீனா நாட்டில் கொராணோ என்ற வைரஸ் பயங்கரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வெறும் 20 நாட்களில் அண்டை நாடுகளான தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் அடியெடுத்து வைத்துள்ளது.

சார்ஸ் மற்றும் மெர்ஸ் வைரஸ் வகையை சேர்ந்தது கொராணோ வைரஸ்‌. மிகவும் சாதாரணமான சளி மற்றும் இருமல் போன்ற அறிகுறிகளை தான் முதலில் பார்க்க இயலும். தொடக்கத்திலேயே இந்த கொராணோ வைரஸை அழிக்காமல் பின்விளைவுகள் மிகவும் மோசமாகும்.

தொடக்கத்தில் சளி, இருமல் ஆகியன ஏற்படும். பின்னர் லேசான காய்ச்சல் அல்லது 2 முதல் 7 நாட்கள் வரை வறட்டு இருமல் இருக்கும். கொராணோ வைரஸ்‌ முதன்முதலில் உடலில் நுரையீரலைத் தாக்கக்கூடும். நுரையீரலில் ஊடுருவி அழற்சியை ஏற்படுத்தும். ஜன்னி என்றழைக்கப்படும் நிமோனியா காய்ச்சலை உண்டாகும் தன்மையுடையதாகும். இறுதியில் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழக்க பாதிப்பு நேரிடும்.

கொராணோ வைரஸ் சார்ஸ் மற்றும் மெர்ஸ் வகையை சேர்ந்தது என்பதால், எளிதில் காற்றில் பரவும் தன்மை உடையது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சு விடும் போது அல்லது தும்மல், இருமல் ஏற்படும்போது இந்த நோய்த்தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய உள்ளதாக மருத்துவர்கள் கவலைப்படுகின்றனர்.

இந்த நோயால் சிக்கி தவிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் சீன அரசாங்கம் புதிதாக மருத்துவமனை கட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன அரசாங்கத்தினால் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த சித்த மருத்துவரான திருத்தணிகாசலம் இந்த நோய்க்கு எதிரான சித்தமருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருந்தார். 

மறுநாளே கொரோனா வைரஸ் சம்பந்தமாக செக்ஸ்வீடியோ சுகாதாரத்துறை அமைச்சராக விஜயபாஸ்கரிடம் கேட்டிருந்த போது, "சித்தமருத்துவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்தானது ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தினால் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இயலுமா என்பது தெரிந்த பிறகு அடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று கூறியுள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றின் முடிவை பொறுத்தே அடுத்த நடவடிக்கைகளை எடுக்க இயலும்" என்றும் கூறியுள்ளனர்.

இந்த மருந்தினால் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த இயலும் என்று நிரூபிக்கப்பட்டால் தமிழின் பெருமை மீண்டும் உலகின் எட்டு திக்கும் முழங்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.