உன் கணவனுக்குத் தான் குறை! உனக்கு நான் குழந்தை தருகிறேன்! சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு சித்த மருத்துவர் கொடுத்த அதிர்ச்சி!

குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி சிகிச்சைக்காக வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த சித்த மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் சித்த மருத்துவர் அண்ணாதுரை என்பவர் தன்னுடைய குடும்பத்துடன் வாழ்ந்துவருகிறார். மருத்துவர் வசித்துவரும் தன்னுடைய வீட்டிலேயே சித்த மருத்துவம் சாலையை நடத்தி வருகிறார். இவரிடம் பலரும் சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 6 மாதத்துக்கு முன்பு ராஜேஷ் என்பவர் மஞ்சகாமலைக்கு சிகிச்சை பெறுவதற்காக அண்ணாதுரை இடம் வந்திருக்கிறார். ராஜேஷுக்கு சித்த மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு மஞ்சள்காமாலை குணமாகி இருக்கிறது. ராஜேஷ் ஏற்கனவே திருமணமாகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்து வந்துள்ளார். இதனால் தன்னுடைய குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிக்குமாறு அண்ணாதுரை இடம் கேட்டிருக்கிறார்.

அதற்கு சித்த மருத்துவர் அண்ணாதுரையும் இருவருக்கும் சிகிச்சை அளிக்க சம்மதித்து இருக்கிறார். இதனையடுத்து ராஜேஷும் அவரது மனைவியும் கடந்த ஆறு மாத காலமாக அண்ணாதுரை இடம் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் மருத்துவர் அண்ணாதுரையின் வீட்டில் இருந்த அவரது மனைவி குழந்தைகள் அனைவரும் வெளியே சென்று இருக்கின்றனர். இந்த நேரத்தை தனக்கு சாதகமாக மருத்துவர் பயன்படுத்த நினைத்திருக்கிறார். 

உடனே ராஜேஷுக்கு போன் செய்து புதிதாக மருந்து ஒன்றை கொண்டு வந்துள்ளதாகவும் அதை வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறி இருக்கிறார். அந்த நேரத்தில் ராஜேஷ் வெளியே வேலையில் இருந்ததால் அவரது மனைவியை மருத்துவர் அண்ணாதுரையின் வீட்டிற்கு சென்று வாங்கி வருமாறு அனுப்பியிருக்கிறார்.

அப்போது மருந்தை பெறுவதற்காக வந்த அந்த பெண்ணிடம் மருத்துவர் அண்ணாதுரை, அந்தப் பெண்ணின் கணவர் ராஜேஷுக்கு தான் பிரச்சினை என்று கூறி அவளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் உடனடியாக வெளியே வந்து கூச்சலிட்டு இருக்கிறாள்.

அவளுடைய அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர் மருத்துவரின் இல்லத்திற்கு வந்துள்ளனர். மேலும் அந்த பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்திருக்கிறார். தகவல் அறிந்து வந்த போலீசார் மருத்துவரை கைது செய்ய வந்தபோது அவர் தப்பி ஓடிவிட்டார். இருப்பினும் கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சித்த மருத்துவர் அண்ணாதுரையை கைது செய்துள்ளனர் இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.