காலில் சலங்கை! கைகளில் பறை! இணையத்தை தெறிக்கவிடும் கமல் மகள் ஸ்ருதி! வைரல் வீடியோ உள்ளே!

நடிகை ஸ்ருதிஹாசன் பறையை இசைக்கும் வீடியோவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது


ஸ்ருதிஹாசன்  பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருகிறார். பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிகா ஆகியோரின் மகள் ஆவார்.

இவர் எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நடிகை இந்த ஆண்டு உடன் ஸ்ருதிஹாசன் திரைப்பட உலகில் கால்பதித்து 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை அவரே மகிழ்ச்சியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டு இருந்தார். 

எப்பொழுதும் புதுப்புது விஷயங்களில் தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டுமென நினைப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசனுக்கு பறை இசையில் ஆர்வம் கூடியுள்ளது. ஆகையால் கடந்த சில காலமாகவே அவர் பறை இசை வாசிப்பதை பெற்று வந்துள்ளார்.

தற்போது அவர் கால்களில் சலங்கை கட்டியும் கையில் பறையை  வைத்துக்கொண்டும்  வாசிக்கும் வீடியோவானது இணையத்தில் வெளியாகியுள்ளது . 

இதனை ஸ்ருதிஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இதனை பார்த்த அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஸ்ருதியை வாழ்த்தி வருகின்றனர் .

https://www.youtube.com/watch?v=D7Rn30r_x1I