நீச்சல் உடையில் கல்யாணம் ஆன பிரபல நடிகை போட்ட ஆட்டம்! முகம் சுழிக்கும் ரசிகர்கள்!

நடிகை ஸ்ரேயா சரண் தென்னிந்திய திரை உலகில் மிகவும் பிரபலமானவர்.


இவர் தனது திரைப்பட வாழ்க்கையை கடந்த 2001 ஆம் ஆண்டு "இசுதாம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் தொடங்கினார். 2002 ஆம் ஆண்டு "சந்தோசம்" என்ற வெற்றி தெலுங்குத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் பிரபலமனார். இதன் பின்னர் தெலுங்குத் திரையுலகில் முக்கியத் திரைப்பட நடிகர்களுடன் நடித்தார்.

பின்னர் பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் நடிக்கும் வாய்பை பெற்றார். "எனக்கு 20 உனக்கு 18" திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். 2007 ஆம் ஆண்டு வெளியான "சிவாஜி" திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நடித்துள்ளார்.

கடந்த மார்ச் 12, 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார். இவர் இன்று வரை இவர்களது திருமண புகைப்படங்களை வெளியீட்டதில்லை.

ஆனால் சமீபத்தில் இவர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில், தனது கணவருடன் இணைந்து இருக்குமாறு புகைப்படம் ஒன்றை வெளியீட்டு உள்ளார். இவரது கணவர் ஆன்ட்ரிவின் முகம் கண்ணாடியில் பிரதிபலிக்க, மிகுந்த புன்னகையுடன் அவரை பார்க்கிறார் நடிகை ஸ்ரேயா. அதுமட்டுமில்லாமல் "ஹாப்பிநெஸ்" என்றும் கேப்ஷன் இட்டுள்ளார்.   

இவர் தனது விடுமுறை நாள்களை கணவர் ஆன்ட்ரி உடன் லண்டனில் உல்லாசமாக கழித்து வருகிறார். அங்கு அவர் பிங்க் நிற பிகினி அணிந்து கொண்டு  உற்சாகமாக நடனம் ஆடியுள்ளார்.  இந்த விடியோவை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு உள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.  இதை பார்த்த இவரது ரசிகர்கள் பலவிதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். 

ஸ்ரேயா கடைசியாக தெலுங்கு உலகின் சிறப்பு நட்சத்திரமான பாலகிருஷ்ணா அவர்களின் "NTR கதாநாயக்காடு" என்ற திரைப்படத்தில் நடித்தார்.  மேலும் தமிழில் நரகாசூரன் மற்றும் ஹிந்தியில் தட்கா போன்ற திரைப்படங்களில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.