கொரோனா ஊரடங்கை மீறி வீட்டை வீட்டு வெளியே வருபவர்கள் சுட்டுக் கொலை..! எங்கு தெரியுமா?

உலக முழுவதும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக ஒவ்வொரு நாட்டிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வருகின்றனர். இதற்கிடையில் மக்கள் ஊரடங்கு உத்தரவு மிறி வெளியே சுற்றி வருகின்றன இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பிலிப்பைன்ஸ் அதிபர் அவர்கள் ஊரடங்கு உத்தரவை மீறுவோரை தேவைப்பட்டால் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளார்.


உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்திய உள்ள கொடூர கொரோனா வைரஸினால் மக்கள் பெருதும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவினால் பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக சமூக விலகல் மற்றும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி வருகின்றனர். இந்த மாதரி அரசு பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் மக்கள் அனைவரும் அதனை அலட்சியப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டிலும் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருகின்றது. அந்நாட்டில் இதுவரை 2,311 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 96 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதனால் அந்நாட்டு அதிபர் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். ஆனால் அந்நாட்டு மக்கள் மதிக்கமால் சுற்றி திரிகின்றார்கள். மேலும், மணிலாவின் குயிசான் நகரைச் சேர்ந்த குடிசைப்பகுதி மக்கள் அதியாவசியப் பொருட்கள் கிடைக்கவில்லை எனக் கூறி நெடுஞ்சாலையில் போராட்டம் எல்லாம் நடத்தி வருகின்றார்கள்.   இதனால் அந்நாட்டு அதிபர் உத்தரவை மீறும் நபர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என அதிபர் ரோட்ரிகோ டுட்டர்டே எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அதிபர் டுட்டர்டே, ‘ஊரடங்கு உத்தரவுக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியம் என்றும் ஊரடங்கு உத்தரவை மீறி, சுகாதார பணியாளர்கள், டாக்டர்களுக்கு இடையூறு செய்வது மிகப்பெரிய குற்றம் ஆகும் என்று தெரிவித்தார். 

மேலும், அவர் உரையில் காவல்துறை மற்றும் ராணுவத்திற்கு ஊரடங்கை மீறுவோர்களால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட்டாலோ, உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ, அவர்களை சுட்டுக் கொல்லுங்கள்’ எனவும் பேசினார். இந்த செய்தி நாட்டு மக்களுக்குயிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.