இரவு நேரத்தில் வந்த அமானுஸ்ய சப்தம்! பீதியில் புகார் அளித்த மக்கள்! தேடிச் சென்ற போலீஸ் கண்ட காட்சி!

இரவு நேரங்களில் அசாதாரண சத்தம் கேட்பதாக வெளியான புகார்களை விசாரித்தபோது காவல்துறையினர் அதிசயத்தை கண்டுள்ளனர்.


ஜெர்மனி நாட்டில் ஆக்ஸ்பர்க் என்னும் நகரம் அமைந்துள்ளது. நகரத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் இரவு நேரங்களில் வினோதமான சத்தங்கள் கேட்பதாக மக்கள் உணர்ந்துள்ளனர். அருகிலிருப்போர் உடலுறவு கொள்ளும் போது எழுப்பப்படும் சத்தமென்றும் அல்லது அடிப்பட்ட விலங்குகள் வலிதாங்க முடியாமல் கத்துவதாகவும் தொடக்கத்தில் எண்ணினர்.

சத்தம் குறையாமலேயே இருந்ததால் அவர்கள் மிகவும் அசவுகரியமாக உணர்ந்தனர். பல பகுதிகளை சேர்ந்த மக்கள் காவல் துறையினரிடம் இது பற்றி புகார் அளித்தனர். நிறைய புகார்கள் எழுந்ததால் காவல்துறையினர் விசாரணை நடத்த முற்பட்டனர். 

நீண்ட நாட்களாக ஆய்வு செய்தபின் அப் பகுதியில் அமைந்திருந்த விளையாட்டு மைதானத்தில் இருந்தே அபாயகரமான ஒலி எழுவதை காவல்துறையினர் கண்டறிந்தனர். பின்னர், இரவு நேரத்தில் உயர்ரக விளக்குகளை உபயோகித்து ஆய்வு செய்தபோது, அப்பகுதியில் ஹெஜ்ஹாக்ஸ் உயிரினத்தை போன்ற முள்ளெலிகள் உடலுறவு கொண்டிருப்பதை கண்டுள்ளனர்.

உடலுறவின் போது அந்த மூலிகைகள் எழுப்பிய சத்தமே அனைவருக்கும் அசவுகரியமாக இருந்துள்ளதை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இது குறித்து சில மருத்துவ அறிஞர்களிடம் விசாரித்தபோது இதுப்போன்ற முள்ளெலிகள் உடலுறவின்போது மனிதர்களைப் போன்று அதிக அளவில் சத்தம் எழுப்பும் என்று கூறியுள்ளனர்.

மேலும் அவை கோடை காலத்தில் மட்டுமே இனப்பெருக்கம் செய்யும் முறை கொண்டுள்ளதால் அவற்றை ஒன்றும் செய்யாமல் இருப்பதற்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இந்த சம்பவமானது ஆக்ஸ்பர்க் நகரத்து மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.