சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாடகி சித்ரா! வைரலாகும் புகைப்படத்தின் பரபரப்பு பின்னணி!

பாடகி சித்ரா சபரிமலைக்கு சென்று தரிசித்ததாக வெளியான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி "பின்னணிப் பாடகர்களில்" ஒருவர் சித்ரா. இவருடைய குரல் தன்மையினால் "சின்னக்குயில் சித்ரா" என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். 

இதனிடையே சமீபத்தில் இவர் சபரிமலைக்கு சென்று சுவாமி ஐயப்பனை தரிசித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. நெட்டிசன்கள் சிலர் இவர் இந்த வருடம் தான் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்தார் என்றும் சமூக வலைத்தளங்களில் பரப்பி வந்தனர்.

ஆனால் உண்மையை ஆராய்ந்து பார்த்தபோது அந்த புகைப்படமானது, இவர் சென்ற ஆண்டு சபரிமலைக்கு சென்ற போது எடுக்கப்பட்டதாகும். இதனால் சமூக வலைத்தளங்களில் இந்த சர்ச்சை சற்று ஓய்ந்துள்ளது.

வலைத்தளங்களில் வெளியாகும் புகைப்படங்களின் உண்மைத்தன்மையை ஆராயாமல் நெட்டிசன்கள் அதனை வைரல் ஆக்குவது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.