திடீரென துடித்த இதயம்! 2வது டாக்டர் சொன்ன அதிர்ச்சி தகவல்! ரித்தீஷின் திக் திக் கடைசி நிமிடங்கள்!

மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர் ஒருவர் கூறிய நிலையில் வீட்டிற்கு அழைத்துவரப்பட்ட நிலையில் திடீரென ரித்திஷ் இதயம் துடித்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது-


நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு களப்பணியாற்ற கடந்த 10ஆம் தேதி இரவு தான் சென்னையிலிருந்து ராமநாதபுரத்திற்கு புறப்பட்டுள்ளார் ஜேகே ரித்தீஷ். அப்போது அவருக்குத் தெரியவில்லை இதுதான் சென்னையில் தான் இருக்கப் போகும் கடைசி நாள் என்று. ராமநாதபுரம் சென்ற அன்றைய தினமே பாஜகவின் நயினார் நாகேந்திரன் சந்தித்து தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார் ஜேகே ரித்தீஷ்.

இதன் பிறகு உடனடியாக களப்பணியில் இறங்கிய ஜேகே ரித்தீஷ் நயினார் நாகேந்திரனுக்கான யுகத்தை வகுத்து அதன்படி தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வந்துள்ளார். ராமநாதபுரத்திற்கு பிரதமர் மோடி வந்து செல்லும் நிகழ்ச்சியிலும் தன்னுடைய பங்களிப்பை அளித்துள்ளார் ஜேகே ரித்தீஷ். பிரதமர் மோடி நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்கிருந்து நேராகத் தனது வீட்டிற்கு சென்றபோது ரித்தீஷ் சாப்பிட அமர்ந்துள்ளார்.

அப்போது தனக்கு நெஞ்சு வலிப்பதாக ரித்தீஷ் கூற அருகில் இருப்பவர்கள் பதறி அடித்துக்கொண்டு ராஜன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்றதுமே ரித்தீஷை பரிசோதனை செய்து விட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். நாள் பேரதிர்ச்சிக்கு ஆளான உறவினர்கள் கதறியபடியே ஜேகே ரித்தீஷ் உடலை வீட்டிற்கு தூக்கி வந்துள்ளனர்.

வீட்டுக்கு வந்ததும் ஜேகே ரித்தீஷ் என் இதயம் துடிப்பது அங்கிருந்த சிலர் கூறியுள்ளனர். பரிசோதித்துப் பார்த்தபோது ரித்தீஷ் இதயம் துடிப்பது போல் தெரிந்துள்ளது. உடனடியாக அரவிந்தனும் மருத்துவமனைக்கு ரித்தீஷ் உடலைத் தூக்கிச் சென்றுள்ளனர் உறவினர்கள். அங்கு பரிசோதனை செய்துவிட்டு இல்லை ரித்தீஷ் இழந்துவிட்டது உறுதி என்று மருத்துவர்கள் கைவிரித்தனர்.

இதன்பிறகு ரித்தீஷ் உடல் மீண்டும் ராமநாதபுரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. கடைசி நிமிட திக் திக் ரித்தீஷின் ஆதரவாளர்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களையே உலுக்கிவிட்டது.