தெரிக்கவிட்ட சிவம் துபே! இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறுமா இந்திய அணி?

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்துள்ளது.


டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய லோகேஷ் ராகுல் மற்றும் ரோகித் சர்மா சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய ஷிவம் டுபே அதிரடியாக ஆடி இந்திய அணியின் ரன்னை மளமளவென உயர்த்தினார். 

சிறப்பாக விளையாடிய சிவம் 30

பந்துகளில் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 22 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்தது.

சிறப்பாக பந்துவீசிய வால்ஸ் மற்றும் வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.