சன் டிவி கலாநிதி மாறன் பிசினஸ் டீல்! விஜயை மிஞ்சிய சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனின் 16 வது படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளார்.


சிவகார்த்திகேயன் கடைசியாக கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சீமராஜா. இந்த படத்தை அவரது ஆஸ்தான இயக்குனரான பொன்ராம் இயக்கி இருந்தார். ஆனால் இது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

தற்போது இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு மற்றும் சதீஷ் ஆகியோரும் இதில் நடித்து வருகின்றனர். இது சிவகார்த்திகேயனுக்கு 13 ஆவது படம்.

14ஆவது படத்தை, இன்று நேற்று நாளை திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார். அதற்கு அடுத்த படத்தை இரும்புத்திரை திரைப்பட புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கவுள்ளார். இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் 16 வது படத்தை பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனை தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் பாண்டிராஜ். மெரினா படத்தில் இருவரும் இணைந்தனர். தற்போது மீண்டும் சிவகார்த்திகேயனின் 16 வது படத்தில் இருவரும் இணைய உள்ளனர்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் சர்க்கார் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் தயாரித்து  இருந்தது.  ராகவா லாரன்ஸ் நடிக்கும் காஞ்சனா திரைப்படத்தில் மூன்றாவது பாகத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.