ஒரே ஒரு ரூபாய்க்கு நவ நாகரீக உடைகள்! வாங்கிக் குவிக்க அடித்து மல்லுக்கட்டிய பெண்கள்! எந்த கடை தெரியுமா?

ஒரு ரூபாய்க்கு துணி வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டம் அலை மோதிய சம்பவமானது ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்ய நாட்டில் விளாடிகவக்ஸ் என்ற நகரம் அமைந்துள்ளது. இங்கு ஸ்டோலிஸ்டா என்ற துணிக்கடை இயங்கி வருகிறது. இந்த துணிக்கடையில் புதியதொரு கவர்ச்சிகரமாக அறிவிப்பு வெளியானது. அதாவது இந்திய மதிப்பில் 1 ரூபாய்க்கு துணிகள் விற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்பை கேள்விப்பட்டவுடன் பெண்கள் கடைக்குள் குவிந்த வண்ணம் இருந்தனர். ஒவ்வொருவரும் மற்றொருவரின் கைகளிலிருந்த துணியை பறித்து கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருந்தனர். இந்த வீடியோவ அழகு சமூக வலைத்தளங்களில் வைரலாக தொடங்கியது.

ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டும், கடுமையான சண்டை போட்டுக்கொண்டும் கடையில் பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளனர். இந்த வீடியோவை கண்ட பலர் சாதாரண துணைக்காக இவ்வளவு மோசமாக மக்கள் நடந்து கொள்வார்களா என்றும் அவர்கள் எந்த வகையில் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டனர் என்றும் கமெண்ட்களை பதிவு செய்துள்ளனர். 

இந்த சம்பவமானது ரஷ்யாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது