மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடர்! இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட மூத்த வீரர்! சேர்க்கப்பட்ட இளம் வீரர்!

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார்.


மேற்கிந்திய தீவுகள் அணி இந்திய அணியுடன் டி20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

 இந்நிலையில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவன் இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு டெல்லி சையத் முஷ்டக் அலி தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் விளையாடிய ஷிகர் தவானுக்கு இடது முழங்காலில் காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாக நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். 

ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக ஷிகர் தவான் விலகியதால் இளம் வீரர் சஞ்சு சாம்சன் இந்த அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.