33 வயதில் வெட்கத்தை விட்டு கடிதம் எழுதி கேட்ட ஷெரீன்! கமல் முன்னிலையில் தர்ஷ்ன் சொன்ன பதில்! அதிர்ந்த பிக்பாஸ் அரங்கம்!

ஷெரின் தர்ஷனுக்கு காதல் கடிதம் எழுதிய சம்பவமானது பிக்பாஸ் வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.


நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இது சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தர்ஷினி பிரிய விரும்பாமல் வீட்டு உறுப்பினர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.

இந்நிலையில் தர்ஷன் வெளியேறுவதற்கு கொஞ்ச நேரம் முன்பு ஷெரின் தர்ஷனின் சூட்கேசுக்குள் காதல் கடிதம் எழுதி மறைத்து வைத்தார். பின்னர் தர்ஷன் வீட்டை விட்டு வெளியேறிய உடன் நிகழ்ச்சி தொகுப்பாளரான கமல் அவரை விட்டு உறுப்பினர்களிடம் பேச வைத்தார். அப்போது கமல்ஹாசன், ஷெரினின் கடிதத்திற்கு என்ன பதில் என்று கேட்டார்.

உடனடியாக ரசிகர்கள் ஆரவாரம் செய்ய தொடங்கினார். அதற்கு தர்ஷன் ஷெரினை நோக்கி, "இன்னும் 7 நாட்கள்தான் இருக்கிறது. வெளியே வந்தவுடன் என் பதில் கூறுகிறேன்" என்று கூறினார். பின்னர் ரசிகர்களை நோக்கி "இது அந்த பதிலில்லை" என்று கூறினார்.

இந்த சம்பவமானது பிக் பாஸ் வீட்டில் சிறிது நேரம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.