பிக்பாஸ் மூலம் புதிய அனுபவம்! ஆனால் இப்போது அது இல்லாமல் தவிக்கிறேன்! ஷெரீன் சற்று முன் வெளியிட்ட தகவல்!

பிக் பாஸ் சீசன் 3 பைனல் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. பிக் பாஸ் சீசன் 3 இல் நான்காம் இடத்தைப் பிடித்த நடிகை ஷெரின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தனது ரசிகர்களுக்காக முதன் முறையாக ஒரு ட்வீட் செய்துள்ளார்.


பரபரப்பாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 பைனலில் முகேன் ராவ் வெற்றிபெற்றார். பிக் பாஸ் சீசன் 3 இல் நான்காம் இடத்தை பிடித்த நடிகை ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்துள்ளார் . 

நடிகை ஷெரின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டி பொறாமை இன்றி நேர்மையாக நடந்து கொண்டதால் , ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். மேலும் அதிக வாக்குகள் பெற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனலுக்கு தகுதி பெற்றார். 

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர் நடிகை ஷெரின் தனது ரசிகர்களுக்காக சமூக வலைத்தளத்தில் ஒரு டுவிட் செய்துள்ளார்.அதில் நடிகை ஷெரின் , ரசிகர்கள் என் மீது வைத்துள்ள அன்பிற்கும் எனக்கு கொடுத்த ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி எனது வாழ்க்கையில் கிடைத்த மிகச்சிறந்த அனுபவம் எனவும் , பிக் பாஸ் (Biggie baby)யை நான் மிகவும்  மிஸ் செய்யப்போகிறேன் எனவும் அதில் ட்விட் செய்துள்ளார்.