கர்ப்பமாக இருக்கிறேன்..! கணவனுக்கு கூட தெரியாத ரகசியத்தை டைரக்டரிடம் கூறிய நடிகை..! ஆனால் அடுத்த சில நிமிடங்களில்..! நெஞ்சை உலுக்கிய சம்பவம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜோடியாக நடித்த பிரபல நடிகை இறப்பதற்கு முன் கடைசியாக பேசிய வார்த்தைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


1990-2000-ஆம் தொடக்க காலத்தில் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் கர்நாடகா மாநிலத்தின் பிறந்திருந்தாலும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து, தன்னுடைய நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் படையப்பா படத்தில் இவர் கதாநாயகியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய நடிப்பு வாழ்க்கையில் உச்சத்தில் இருந்தபோது 2004-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதியன்று விமான விபத்தில் துரதிஷ்டவசமாக மரணமடைந்தார். 31 வயதிலேயே விமான விபத்தில் உயிரிழந்தார். இவரை தமிழ் திரையுலகில் அறிமுகப்படுத்தி, வழிகாட்டியாக விளங்கியவர்,  இயக்குநர் ஆர்.வி.உதயகுமார். 

உதயகுமார் சமீபத்தில் சௌந்தர்யா குறித்த ஒரு செய்தியை ஊடகங்களில் தெரிவித்தார். அதாவது, நடிகை சௌந்தர்யா விபத்தில் உயிரிழப்பதற்கு சில நாட்கள் முன் தன்னுடைய மனைவி சுஜாதாவை செல்போனில் தொடர்பு கொண்டதாக உதயகுமார் கூறியுள்ளார். அப்போது சௌந்தர்யா,  "அண்ணி இப்போதான் வாசு சாரோட "ஆப்தமித்ரா" படத்தை முடிச்சேன். தற்போது 2 நான் கர்ப்பமாக இருக்கிறேன். உடம்பு ரொம்ப டயர்டா இருக்கு. ரெஸ்ட் எடுக்கலாம்னா எலெக்ஷன் வந்துருச்சு. அண்ணன் இப்போ பிரச்சாரத்துக்கு கூப்பிடுறாரு. முடிஞ்சதும் ஃபுல்லா ரெஸ்ட் தான். சென்னை வந்தால் நிச்சயமாக உங்க வீட்டுக்கு வருவேன்" என்று கூறியுள்ளார்.

மறுநாளே சௌந்தர்யா எனக்கு போன் செய்தார். அப்போது, "சார் உங்களை நான் எப்பொழுதும் மறக்கமாட்டேன். நீங்க எனக்கு சினிமால கொடுத்த வாய்ப்பை என்னைக்கும் மறக்காம இருப்பேன்" என்று கண்ணீர் மல்க கூறினார். அதன் பின்னர் நான் எப்பொழுதும் போல சாதாரணமாக பேசிவிட்டு போனை வச்சிட்டேன்.

மறுநாள் பட பூஜையின் அழைப்பிதழை கொடுப்பதற்காக சத்யராஜ் சார் வீட்டிற்கு சென்றேன். அப்போது அவர் வாசலிலேயே நின்று கண்கலங்கி சௌந்தர்யா இறந்த செய்தியை கூறியதும் அனலிடைப்பட்ட புழு போன்று வலியால் துடித்து போனேன்" என்று கண்ணீர் மல்க கூறினார்.

இந்த பேட்டியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.