நீ இருந்தா.. என்னால அது செய்ய முடியாது..! பெற்ற தாயை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர மகள்! பதற வைக்கும் காரணம்!

காதலனுடன் சேர்ந்து கொண்டு மகள் தாயை கொலை செய்துள்ள சம்பவமானது தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்திற்கு உட்பட்ட ஹயாத் நகரில் கீர்த்தி ரெட்டி என்ற இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கீர்த்தி ரெட்டி அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கீர்த்தி ரெட்டிக்கு அதே பகுதியை சேர்ந்த ஷஷி என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. நெருக்கமானது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்துள்ளனர். இருவரும் உல்லாசமாகவும் இருந்துள்ளனர். இந்நிலையில் கீர்த்தி ரெட்டியின் தாயாருக்கு இவர்களுடைய உறவைப்பற்றி தெரிய வந்துள்ளது. உடனடியாக அவர் இருவரையும் கண்டித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் கீர்த்தி ரெட்டியின் தந்தை வேலை நிமித்தமாக வெளியூருக்கு சென்றிருந்தார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது தன் மனைவி இல்லாததை கண்ட அவர் தன் மகளான கீர்த்தி ரெட்டியிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் சரிவர பதில் அளிக்காததால், அவரை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள காவல்நிலையத்திற்கு சென்று மனைவியை காணவில்லை என்று அவர் முறையிட்டுள்ளார்.

நிகழ்ந்தவற்றை அறிந்த காவல்துறையினர் கீர்த்தி ரெட்டியிடம் விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணை தொடக்கத்திலிருந்து முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்து வந்துள்ளார். இதனால் காவல் துறையினருக்கு கீர்த்திரெட்டியின் மீது சந்தேகம் எழுந்துள்ளது. 

முதலில் தன்னுடைய தந்தை குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறியுள்ளார். அதன்பின் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டபோது தான் தன்னுடைய காதலனுடன் இணைந்து தன் தாயை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இருவரும் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் 3 நாட்களுக்கு சடலத்துடன் இருவரும் கழித்துள்ளனர். பின்னர் துர்நாற்றம் வீச தொடங்கியதால், ராமண்ணாபேட் ரயில்வே நிலையத்தில் வீசிவிட்டனர். காவல்துறையினர் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.