ஷெரீன் வலையில் தர்ஷன் விழுந்துவிட்டான்..! அதனால் தான்..! பிக்பாஸ் சீக்ரெட்டை உடைத்த வனிதா!

தர்ஷனை ஷெரின் நம்ப வைத்து ஏமாற்றியதாக சக போட்டியாளராக வனிதா கூறியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இது சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தர்ஷினி பிரிய விரும்பாமல் வீட்டு உறுப்பினர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.

இந் நிலையில் தர்ஷன் வெளியேறுவதற்கு கொஞ்ச நேரம் முன்பு ஷெரின் தர்ஷனின் சூட்கேசுக்குள் காதல் கடிதம் எழுதி மறைத்து வைத்தார். சாண்டி, முகென், லாஸ்லியா ஆகியோர் கதறி அழுது கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தர்ஷனின் வெளியேற்றத்திற்கு ஷெரின் முக்கிய காரணம் என்று வனிதா விஜயகுமார் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அவர், "ஷெரின் திட்டம் தீட்டினார். அதை வெற்றிகரமாக செய்து முடித்தார். மிகுந்த மன வலிமையுடன் திட்டத்தை நிறைவேற்றினார். என் மனம் மிகவும் பாரமாக உள்ளது. ஜெயிக்க வேண்டிய தர்ஷன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்" என்று காட்டமாக பதிவிட்டிருந்தார்.

வனிதா வீட்டில் இருந்தபோது ஷெரினுக்கும், தர்ஷனுக்கும் இடையே காதல் இருப்பதாக கூறி புகைச்சலை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ட்வீட்டானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.