என் தாத்தா பாட்டிக்கு 15 பிள்ளைகள்! ஆனால் நான்..! அஜித் ஹீரோயின் சொன்ன ஷாக் தகவல்!

விக்ரம் வேதா, நேர் கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் புகழை சம்பாதித்தவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.


நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசுகையில், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளை பற்றி கூறியிருந்தார். பெண்களுக்கு எதிராக ஏற்படும் பாலியல் வன்முறைகளை பற்றிய விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

இன்னமும் பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன என்பதைப் பற்றி தெளிவான எண்ணம் எவரிடமும் இல்லை என்றுதான் நான் கூறுவேன் என்றும் கூறினார். இன்றும் அனேக மக்கள் பாலியல் வன்முறை என்றால் பெண்களை பலாத்காரம் செய்வது மட்டும்தான் என்று கருதுகின்றனர்,

அது தவறு. பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் சிறுசிறு பாலியல் சீண்டல்கள் பாலியல் வன்முறைகளுக்குள் அடங்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது ஒரு பெண்ணிடம் தவறாக பேசுவது கூட பாலியல் துன்புறுத்தல் கீழ்தான் அடங்கும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.  

இதனைப் போலீசிடம் கொண்டு செல்லும்போது அவர்களிடமும் இதனைப்பற்றி கூறுவதற்கு பெண்கள் தயங்குகின்றனர் . இதனை மீறி வழக்கு நீதிமன்றத்தை அணுகும் போது அந்த வழக்கு முடிவதற்கு பல வருடங்கள் ஆகி விடுகின்றன. இதெல்லாம் மாற வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

காலப்போக்கில் எல்லாமே மாறுகிறது. ஆனால் பெண்கள் மீதான பார்வை மட்டும் இன்னும் மாறவில்லை. என் தாத்தா பாட்டிக்கு மொத்தம் 15 பிள்ளைகள் பெற்றார்கள். என் அம்மாவுக்கு இரண்டு பிள்ளைகள் பெற்றார்கள். ஆனால் நான் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளேன் என்று கூறினார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.