ஷேர் ஆட்டோவை மோதி தூக்கிய லாரி! 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம்! பதைபதைக்க வைத்த விபத்து!

லாரியும், ஷேர் ஆட்டோவும் மோதிக்கொண்டதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்த சம்பவம் அல்லது மதுரையில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி எனும் இடம் அமைந்துள்ளது. இங்கிருந்து எழுமலை பகுதிக்கு பள்ளி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராவிதமாக எதிரே அதிவேகத்தில் வந்த லாரி  ஷேர் ஆட்டோவின் மீது மோதியுள்ளது. மோதிய அதிர்ச்சியில் சம்பவ இடத்திலேயே 3 மாணவிகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்துபோன அனைவரின் சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோன்று உயிருக்கு போராடி கொண்டிருந்த 3 மாணவிகளை அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர்.

வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.