மகனை வைத்து பாக்யராஜ் எடுக்கும் முதலிரவு சமாச்சார படம்! நாயகி யார் தெரியுமா?

10 வருடங்களுக்கு பின்னர் இயக்குநர் பாக்கியராஜ் தன்னுடைய மகனுடன் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.


கோலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாக்கியராஜ். இவர் தமிழ் திரையுலகை மாற்றிய இயக்குநர்களில் முதன்மை இடத்தை பெற்றவர். இவருடைய மகனின் பெயர் சாந்தனு. இவரும் "சக்கரக்கட்டி" என்னும் திரைப்படத்தில் கதாநாயகனாக 2010-ஆம் ஆண்டில் அறிமுகமாகினார்.

அடுத்த சில திரைப்படங்களிலும் தன் தந்தையுடன் நடித்திருந்த நிலையில், படங்கள் சரியாக ஓடவில்லை. இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சாந்தனுவுடன் பாக்கியராஜ் நடிக்கப்போகிறார். இந்த படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக அதுல்யா நடிக்கவுள்ளார். மனோபாலா, மயில்சாமி, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கவிருக்கின்றனர்.

இந்த படத்தை ஸ்ரீஜர் என்ற இயக்குநர் இயக்கவுள்ளார். அவர் கூறுகையில், "காமெடியான நிறைய திருமணங்கள் சினிமாவாக மாறியுள்ள நிலையில், இது ஒரு ரொமாண்டிக் திரைப்படமாக உருவாகவுள்ளது" என்று கூறியுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், பர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த செய்தியானது கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.