ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவரானார் பிரபல CSK வீரர்!

பிரபல ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவர் ஆனார்.


ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் ஒரு சில வருடங்களுக்கு முன்னால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஐபிஎல் இல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய ஷேன் வாட்சன் தனது சிறப்பான ஆட்டத்தால் ரசிகர்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றார்.

இந்நிலையில் ஆசிரியர் கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கத்தின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஷேன் வாட்சன் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது பற்றி பேட்டி ஒன்றில் பேசிய ஷேன் வாட்சன், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை மிகவும் பெருமையாக கருதுகிறேன். இந்த மிகப்பெரிய கடமையை எனக்கு கிடைத்திருக்கிறது.

இந்த அரிய வாய்ப்பினை உடன் மீண்டும் கிரிக்கெட் உலகிற்கு வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது எனவும் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.