CSKவுக்காக களத்தில் வாட்சன் சிந்திய ரத்தம்! அதிர வைக்கும் புகைப்படம்!

ஐபிஎல் தொடர் கோலாகலமாக கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று முடிந்தது. விறுவிறுப்பாக நடந்த இறுதியாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


 டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 149 ரண்கள் குவித்தனர்.  அதிகபட்சமாக கீரன் பொல்லார்ட்  25 பந்துகளில், 41 ரண்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

150 ரண்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சிறப்பாக தொடங்கினர். பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கட்டுக்கோப்பான பவுலிங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்துக்கொண்டிருக்க  மறுபுறம் தொடக்க ஆட்டக்காரரான ஷேன் வாட்சன் நிலைத்து நின்று ஆடினார். 5 ஓவர்களில் 62 ரண்கள் தேவைப்பட்டபோது லசித் மலிங்கா வீசிய ஓவரில் 4 பவுண்டரிகளை தெறிக்க விட்டார். பின்னர் குருனால் பாண்டியா வீசிய 18-ஆம் ஓவரில் தொடர்ந்து 3 சிக்கர்களை பறக்க விட்டார். கடைசி ஓவரில் 9 ரண்கள் தேவைப்பட்டன. இந்த ஓவரின் 4-ஆம் பந்தில் ஷேன் வாட்சன் ரன்-அவுட் ஆனார். இறுதியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

நேற்று சென்னை அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோவை ஷேர் செய்தார். அதில் வாட்சன் மட்டையை வீசிக்கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட அந்த போட்டோவில் அவர் கால்தொடையில் இரத்தக்கறை படிந்திருந்தது. 

அந்த போட்டோவை பற்றி கூறுகையில் வாடசனுக்கு 16-ம் ஓவர் ஆடிக்கொண்டிருந்த போது கால்தொடையில் போடப்பட்டிருந்த தையல் பிரிந்ததனால் இரத்தம் வடிந்ததாக கூறினார். மேலும் அவ்வளவு வலியையும் பொருட்படுத்தாமல் விளையாடிய ஷேன் வாட்சனுக்கு சென்னை ரசிகர்கள் தங்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் குவிக்கின்றனர்.