ஆப்பரேசன் முடிந்தது! கண்டுகொள்ளாத காதலன் தர்ஷன்..! தவிக்கும் காதலி..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தர்ஷன் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டா


பிக்பாஸ் வீட்டிற்குள் தர்ஷன் இருக்கும்போது , அவரின் காதலி சனம் ஷெட்டி பல்வேறு ட்வீட்களை சமூக வலைதளங்களில் செய்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி விட்டு தர்ஷன் வெளியிடப்பட்டதை அடுத்து சனம் ஷெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இது அழகில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் தன் கையில் ஏற்பட்ட கட்டியை சரிசெய்ய ஆபரேஷன் செய்து இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் நலமோடு இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் முழுவதுமாகக் குணம் அடைவேன் எனவும் அந்தப் பதிவில் கூறியிருந்தார்.

மேலும் அந்த பதிவில் தனக்கு சிகிச்சை செய்த அப்போலோ மருத்துவமனையில் உள்ள டாக்டர்களுக்கு தனது நன்றியை தெரிவித்து இருந்தார் . ஆனால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த காதலன் தர்ஷன் மட்டும் தற்போது வரை சனம் ஷெட்டியை நேரில் சென்று பார்க்கவில்லை. இதனால் சனம் தவித்துப்போய் உள்ளாராம்.