15 வயதில் செய்யக் கூடாத தவறு! குழந்தை இறந்துவிட்டது! தற்போது தவிக்கும் இளம்பெண்! மனதை உலுக்கும் சம்பவம்!

தீவிரவாத இயக்கத்தில் சேரந்ததற்காக வருத்தப்பட்டு இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோவானது அனைவரையும் சோகமடைய செய்துள்ளது.


பிரிட்டன் நாட்டில் 15 வயது பெண்ணாக இருந்தபோது ஷமீமா பேகம் சிரியா நாட்டிற்கு சென்று ஐ.எஸ். அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். அங்க சேர்ந்தவுடன் அவர் அளித்த பேட்டி ஆனது பிரிட்டன் நாட்டினரை கொதிக்க வைத்தது. "நான் ஐ.எஸ். அமைப்பில் சேர்வதற்காகவே சிரியா நாட்டிற்கு வந்துள்ளேன்.

முதன்முறையாக வெட்டப்பட்ட ஒரு தலையை பார்த்த போது எனக்கு எந்தவித அச்சமும் ஏற்படவில்லை. இங்கு நான் கட்டுப்பாட்டுடன் உடை அணியாத பெண்களுக்கு தண்டனை கொடுக்கும் பிரிவில் இணைந்துள்ளேன். என் கையில் எப்பொழுதும் ஒரு துப்பாக்கி இருக்கும். மனித வெடிகுண்டுகளாக கருதப்படுபவர்கள் கடைசி நேரத்தில் பின்வாங்காமல் இருப்பதற்கு பயிற்சி கொடுத்து வருகிறேன்" என்று பேட்டி அளித்திருந்தார்.

தற்போது அவர் அளித்துள்ள பேட்டி ஆனது நேர்மாறாக அமைந்துள்ளது. ரோஜ் என்னும் இடத்திலுள்ள முகாமிற்கு மாற்றப்பட்ட போது அவருடைய மகனை இழந்துள்ளார். என்னுடைய மகன் இறந்துவிட்டான். இனி நான் யாருக்கும் பயப்பட வேண்டியது இல்லை. எங்களைக் கொன்று விடுவார்கள் என்ற ஒரே பயத்தினால்தான் நான் அவ்வாறு ஒரு பேட்டி அளித்தேன்.

ஆனால் தற்போது எனக்கு என்று யாரும் இல்லை. என்னை எப்படியாவது பிரிட்டன் நாட்டிற்கு அழைத்து செல்லுங்கள். அங்கு அவர்கள் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன். இங்கு விட பிரிட்டன் நாட்டின் சிறையில் பாதுகாப்பு அதிகளவில் இருக்கும். உடல் ரீதியாக பலமாக இருந்தாலும் மன ரீதியாக மிகவும் பலவீனமாகிவிட்டேன்" என்று அழுதுகொண்டே கூறியுள்ளார்.

இந்தப்பேட்டியை டெய்லி மெயில் என்ற பத்திரிக்கை அவரிடம் எடுத்தது. கடந்த சில நாட்களாக ஷமீமா பிரிட்டன் நாட்டிற்கு வேறு பெயரில் வந்துள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் இந்த வதந்திகளை அவர் அளித்த பேட்டியானது நொறுக்கியுள்ளது.

இந்த சம்பவமானது பிரிட்டன் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.