பெற்றோரின் பெரும் சந்தேகம்? டீன் ஏஜ் வயதினருக்கு பாக்கெட் மணி கொடுக்கலாமா?

டீன் ஏஜ் வயதினருக்கு பணம் குறித்து எந்தத் தெளிவும் இருக்காது. ஏனென்றால் பணம் சம்பாதிப்பது கடினம் என்பது தெரியாது. பணத்தின் அருமை தெரியாது என்பதால் செலவு செய்யத் தயங்க மாட்டார்கள்.


பணம் சம்பாதிக்க பெற்றோர் படும் கஷ்டம் அவர்களுக்குத் தெரியாது. அதனால் பணத்தின் மதிப்பு பற்றியும், சேமிப்பின் அவசியம் மற்றும் சேமிக்கும் முறைகள் பற்றியும் எடுத்துச் சொல்ல வேண்டும். 

பணமாக கொடுப்பதைவிட உங்கள் டெபிட் கார்டு ஏதேனும் கொடுங்கள். அதில் மாதச் செலவுக்குப் பணம் போட்டு, அதை பயன்படுத்தச் சொல்லுங்கள். அவர்கள் செய்யும் ஒவ்வொரு செலவுக்கும் உங்களுக்குத்தான் எஸ்.எம்.எஸ். வரும்.

அதனால் தவறாக ஏதேனும் செலவழித்தால் உடனே தட்டிக் கேட்க முடியும். எந்தக் காரணம் கொண்டும் பணமாக கொடுத்து பிள்ளைகளை தவறான வழியில் செல்ல அனுமதிக்காதீர்கள்.