சாப்பாட்டில் முடி இருந்தால் சாப்பிடலாமா? தொண்டீசனின் ஆன்மிக தகவல் !!

நம் உறவினர் வீட்டிற்கு சென்றால் அங்கு விருந்து உபசரிப்பார்கள்.அப்பொழுது அவர்கள் பரிமாறும் உணவில் முடி இருந்தால் நம் உறவு நீடிக்கும் என்று சொல்வார்கள்.ஆதலால் நாமும் சிரித்த முகத்தோடு உணவு உட்கொள்வோம்.ஆனால் அவை உண்மையா? என்றால் நிச்சயம் இல்லை.


நாம் உட்கொள்ளும் உணவில் முடி இருந்தால் அவை சுத்தமில்லாத உணவாகும். சாப்பிடுபவர்க்கு தரித்திரம் வந்து சேரும்.மேலும் அதை  சாப்பிடவும் கூடாது.அப்படி சாப்பிடுவதால் உடல் உபாதைகள் ஏற்படும்.இறைவனுக்கு காட்டும் நைவேத்யமும் சுத்தமாக இருக்க வேண்டும்.அதிலும் முடி இருந்தால் நம் குருக்கள் அந்த உணவினை சுவாமிக்கு காட்டமாட்டார்கள். மேலும் மறுபடியும் உணவினை தயார் செய்து சுவாமிக்கு நைவேத்யம் காட்டுவார்கள்.

ஆதலால் தான் நமது குருக்கள் அந்நிய மக்களின் உணவினை ஏற்பதில்லை.மடப்பள்ளியிலே வைத்து சுத்தமாக சமைக்கிறார்கள்.மேலும் ஒரு சில  பிராமணர் சமுதாயத்தில்  உணவு உட்கொள்ளும் பொழுது ஓர் சிறிய முடி கண்ணில்  தென்பட்டாலும் கூட அந்த உணவினை உட்கொள்ளும் அன்பர்கள் சாப்பிடுவதில்லை.. இலையை மடக்கிவிடுகின்றனர்.

யாராவது அன்பர் கேட்டால் அவர் மனது வருத்தம் அடையாமல் இருப்பதற்கு , திடீரென்று வயிறு உபாதை ஏற்படுகிறது என்று சொல்லி அவ்வுணவினை சாப்பிடுவதில்லை.

ஏன் முடி இருந்தால் சாப்பிடக்கூடாது?

நீங்கள் பரிமாறும் உணவில் அறிந்தோ அறியாமலோ உணவில் முடி இருந்தால் உணவை உட்கொள்பவர் தரித்தரத்தால் அவதிப்படுவர்.

துன்பம் வந்து சேரும்.உணவை இடும் எஜமானருக்கு பலன் தராது.நீங்கள் ஹோட்டல் கடைகளில் இருந்து வரவைத்தாலும் சரி,விழா காலங்களில் அமுது செய்வித்தாலும் சரி அவை பொருந்தும்.எந்த ஒரு இடத்தில் உணவு பரிமாறும் பொழுதும் , சமைக்கும் பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அன்னலட்சுமி என்கிற தான்ய லட்சுமி நமக்கு வாசம் செய்வாள்.

ஆதலால் இனி நீங்கள் ஒரு இல்லத்திற்கு சென்று உணவு உட்கொள்ளும் பொழுது முடி இருந்தால் அதை அப்படியே இலையை மூடிவிடவும். அவ்வில்லத்தில் சாப்பிடுவது அன்று ஒருநாள்  மட்டும் தவிர்த்து விடவும்.

குறிப்பு : 

உணவு உட்கொள்பவர் உட்கொள்ளும் பொழுது  உணவில் முடி இருந்தால் இலையை (உணவை) மூடிவிடவும். சாப்பிடக்கூடாது. மேலும் சாப்பிடும் பட்சத்தில் தரித்திரம் உண்டாகும். உணவு உட்கொள்ளும் அன்பர்களுக்கு முடி இருப்பினும் அவர்களுக்கு மட்டும் பொருந்தும்.இவை இல்லத்திற்கும் பொருந்தும்.

தொண்டீசன்.. ஈரோடு..