ஒரே நேரத்தில் அந்த நடிகையையும், அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்தது உண்மை தான்! பிரபல நடிகர் வெளியிட்ட ஷாக் தகவல்!

பிரபல மாடல் நடிகையையும் அவரது தாயாரையும் தான் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான் என்று திமிரு திரைப்படத்தில் வில்லனாக நடித்த நடிகர் விநாயகன் தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது சினிமா துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


நடிகர் விநாயகன், விஷாலின் திமிரு திரைப்படத்திலும் தனுஷ் நடித்திருந்த மரியான் திரைப்படத்திலும் நடிகர் சிம்பு நடித்த சிலம்பாட்டம் திரைப்படத்திலும் வில்லனாக நடித்து புகழ்பெற்றார். மேலும் தற்போது துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார் நடிகர் விநாயகன்.

இந்நிலையில் இவர் மீது மாடல் நடிகையான மிருதுளா தேவி பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். மாடல் அழகியான மிருதுளா தேவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக நடிகர் விநாயகனை அழைத்திருக்கிறார். அப்போது நடிகர் விநாயகன் மிருதுளா தேவியையும் அவரது தாயாரையும் உல்லாசத்துக்கு அழைத்திருக்கிறார். இதனையடுத்து மிருதுளா தகுந்த ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த வழக்கை பதிவு செய்த போலீசார் நடிகர் விநாயகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் .பின்னர் இவர் ஜாமினில் வெளிவந்தார் . மிருதுளா தேவி மேலும் பாலியல் குற்றத்தை உறுதி அளிக்கக்கூடிய பல ஆதாரங்களை போலீசாரிடம் சமர்ப்பித்துள்ளார்.

இதனையடுத்து விநாயகன் மிருதுளாவையும் அவரது தாயாரையும் தான் படுக்கைக்கு அழைத்தது உண்மைதான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதனால் நடிகர் விநாயகம் எந்த நேரத்திலும் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "மீ டு " விவகாரம் அடங்கியுள்ள இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் சினிமா வட்டாரத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.