ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணின் மகள் கற்பழித்து கொலை! கொடூர நபருக்கு பிறகு நேர்ந்த விபரீதம்!

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தவன் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடந்துள்ளது.


மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் டபோடி என்ற இடத்தில் ராணுவ பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் சமையலர் ஆக வேலை பார்க்கும் பெண், செவ்வாய்க்கிழமை மாலையில் வேலை முடிந்து அதே வளாகத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

 

   அப்போது தனது ஏழு வயது மகள் மயக்க நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

 

  உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து விசாரணையை போலீசார் துரிதப்படுத்தினர். அப்போது தான் கொலைக்கான காரணம் தெரியவந்தது.

 

அந்த சிறுமியின் தாயாரிடம் நடத்திய விசாரணையின்போது அதே கல்லூரியில் சமையலர் பணி புரியும் ஒருவர் தனக்கு கணவர் இல்லை என்பதை அறிந்து கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாகவும் ஆனால் அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.

 

மீண்டும் மீண்டும் தன்னை அவர் தொந்தரவு செய்து கொண்டு இருந்ததாகவும்  ஆசைக்கு இணங்க வலியுறுத்தியதாகவும் அந்த பெண் கூறினார். ஒரு கட்டத்துக்கு மேல் அந்த நபரை தான் எச்சரித்ததாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.

 

இதையடுத்து அந்த நபரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அந்த நபரின் சடலம் இருந்தது ‌. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை நெரித்து விட்டு போலீசுக்கு பயந்து அவர் தூக்கில் தொங்கி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

 

  இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியின் தாயாரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.